வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று,ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச சபை எல்லைகுற்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் வெள்ள அனர்த்த காலங்களின் போது வடிகான் அமைப்பின்றி பல்வேறு பட்ட துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து வந்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நன்மை கருதி அன்றைய மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களினால் கடந்த 2006ம் ஆண்டு வாழைச்சேனை கோறளைப்பற்று,ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேசங்களிலும் பாரிய அளவிலான வடிகான் அமைப்பு திட்டம் முன்னொடுக்கப்பட்டது.
கொரியா நாட்டின் நிதியுதவியுடன் 3.5 மில்லியன் அமெரிக்க டெலர் செலவில் நிர்மானிக்கப்பட்ட வடிகால் அமைப்பு மற்றும் அதன் அபிவிருத்தி வேலைகளை பார்வையிடுவதற்காக கொரியா நாட்டில் இருந்து 3 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் நேற்றும், இன்றும்(21.22-2014) கோறளைப்பற்று கோறளைப்பற்று மேற்கு,ஆகிய பிரதேச சபைகளுக்கும்,சபைக்குற்பட்ட பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து பிரதேச சபைகளின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் பொது மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது கொரியா நாட்டின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு திட்டத்தின் நன்மைகளையும் குறைபாடுகளையும் பற்றி நேரடியாக பார்த்து அறிந்து கொண்டதுடன் அப் பிரதேச மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கை பற்றி கலந்துரையாடியதுடன் எதிர் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேன்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
இவ் பாரிய வடிகால் அமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கும் கொரியா நாட்டுக்கும் மிடையிலான நட்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும், கொரியா நாட்டு மக்களின் உதவும் உள்ளத்தினையும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்;,பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர்,சபை உறுப்பினர்களான ஜூனைட் நளீமி,ஐ.ரீ.அஸ்மி,எஸ்.ஐ.அன்வர் ஆசிரியர் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சஹாப்தீன்,ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தமது விஜயத்தின் நட்புக்கு அடையாளமாக சிறு அன்பளிப்புக்களையும் குறிந்த சபை தவிசாளர் செயலாளர்களிடம் அக்குழுவினர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment