Category: Your Kattankudy
-
7000 கி.மீ. தூரத்தை தனது வாகனத்தில் கடந்து ஹஜ்ஜூக்கு வந்துசேர்ந்த இஸ்லாத்தைத் தழுவிய பிரான்ஸ் தம்பதி!
– MJ மக்கா: பிரான்ஸ் நாட்டின் பிரஜையான அலக்ஸாண்டர், 6 வருட இஸ்லாமிய ஆய்வின் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை ஹம்ஸா என மாற்றிக்கொண்டார். இவர் தனது மனைவியுடன் முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவிற்கு வந்து சேர்ந்திருக்கின்றார்.
-
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் சித்தி
– அல்தாப் காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 73 மாணவர்களில் 20 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இது 27.40 வீதமாகும். அத்துடன் மாவட்டத்தில் அதி கூடிய 193 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவான மாணவன் எம்.ஏ அர்ஷக் அகமட் எமது பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எஸ். அகமட் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் அமைக்கப்படும் இஸ்லாமிய நூதனசாலையின் அபிவிருத்தி பணிகள் துரிதம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் அமைக்கப்படும் முஸ்லீம்களின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை (மியூசியம்) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை, காத்தான்குடி பிரதான வீதியில் பழைய காத்தான்குடி நகர சபை கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
-
அல்மனார்: பாடசாலைக் கல்வியுடனான ஷரீஆ கற்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரள்
– அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தில் பாடசாலைக் கல்வியுடனான ஷரீஆ கற்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆண்டு 9 க்கு சித்தியடைந்ந மாணவர்களிடமிருந்து 2015 ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்து கல்வி கற்க விரும்பும் ஆண்கள் எதிர்வரும் 15.10.2014 திகதிக்கிடையில் தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரப்படுகின்றது.
-
எதிர்வரும் 6ம் திகதி அரசாங்க, வங்கி விடுமுறை தினமாக அறிவிப்பு!
கொழும்பு: இலங்கையில் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை (6ம் திகதி) அரசாங்கம் மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹஜ் இன்று ஆரம்பம்
– AF-90 மக்கா: உலகெங்கும் இருந்து புனித மக்காஹ் நகரில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் ஒன்றுதிரண்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை ஹஜ் கடமை ஆரம்பமாகிறது. துல் ஹஜ்ஜின் எட்டாம் நாளில் புனித ஆலயத்தை தரிசித்து, ஹஃபதுல்லாஹ்வை தவாபு செய்தபின்னர், இன்றிரவு (8ம் இரவு) மினாவில் மக்கள் தங்குவர். அதன் பின்னர் 9ம் தினமான நாளை வெள்ளிக்கிழமை அரபாவில் ஹாஜிகள் ஒன்றுகூடுவர்.
-
“சிறுவர்கள் சுதந்திரமாக வாழும் சிறந்த நாடு இலங்கை”- ஜனாதிபதி
கொழும்பு: கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் சிறுவர் தினம் போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஐ.நா.வின் சிறுவர் உரிமை தொடர்பான சாசனத்திற்கிணங்கவே ஒக்டோபர் முத லாம் திகதி சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தோனேசியாவின் ‘உழ்ஹிய்யா சேல்ஸ் கேர்ள்’
– MJ ஜகார்த்தா: எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, உழ்ஹிய்யா கொடுப்பதற்காக மாடுகளைக் கொள்வனவு செய்வதற்காக தங்களது பண்ணைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் முகமாக இந்தோனேசியாவின் டீபொக் பண்ணையின் காட்சியறையில் குறித்த நிறுவனம் ‘சேல்ஸ் கேர்ள்ஸ்’ களை வேலைக்கமர்த்தியிருக்கின்றது.
-
ஜம்ரத் புதிய பாலம்: மணிக்கு 5 இலட்சம் பேரை உள்ளடக்கும்!
– MJ மக்கா: ஹஜ் கடமையின் ஓர் அம்சமான மினாவில் கல்லெறியும் நிகழ்வுக்காக தற்பொழுது புதிய ஜம்ரத் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. “இப்பாலம் ஒரு மணித்தியாலத்துக்கு ஐந்து இலட்சம் மக்களைக் உள்ளடக்கக் கூடியது” என இளவரசர் மன்சூர் பின் மிடெப் தெரிவித்துள்ளார்.
-
என்ன மனிதர்கள் இவர்கள்?
– I.L.M. றிபாஸ் அண்மையில் ஒரு சகோதரரை சந்திப்பதற்காக காங்கேயனோடைக் கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அந்த ஊரின் தெற்கு எல்லையில் ஒரு அழகான பள்ளிவாயலோடு எழில் கொஞ்சும் முறையில் கட்டப் பட்டுள்ள “ஈரான் சிட்டி” என அழைக்கப் படும் வீடமைப்பு திட்டத்தில் அவர் வசிக்கிறார். அந்தப் பிரதேசம் பார்ப்பதற்கு அழகாகவும் ஊரின் உஸ்னத்தோடு ஒப்பிடும் போது ஆறுதலாகவும் இருந்ததது.
-
‘இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடும் மாற்று அரசியல் வேலைத்திட்டத்தின் அவசியப்பாடும்’ என்ற தலைப்பில் NFGGயின் பிரமுகர்கள் சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடும் மாற்று அரசியல் வேலைத்திட்டத்தின் அவசியப்பாடும் என்ற தொனிப்பொருளில் பிரமுகர்களுடனான சந்திப்பு ஒன்று நேற்று 29.09.2014 மாலை 6.30 மணியளவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொழும்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
“குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருக்கின்றனர்”
கொழும்பு: நாட்டில் தற்போது குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,