காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் சித்தி

hiluriya grade 5– அல்தாப்

காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 73 மாணவர்களில் 20 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இது 27.40 வீதமாகும். அத்துடன் மாவட்டத்தில் அதி கூடிய 193 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவான மாணவன் எம்.ஏ அர்ஷக் அகமட் எமது பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எஸ். அகமட் தெரிவித்தார்.

இவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளான திருமதி எஸ் ஏ எம் பதுர்தீன் மற்றும் திருமதி ஆர் அலாவுதீன் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைப் பாராட்டும் முகமாக பாடசாலைக்கு நேரில் விஐயம் செய்த மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் ஐனாப் அகமது லெவ்வை, மாணவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளதையும் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் விபரங்களும் பின்வருமாறு,

            பெயர்                                                         புள்ளிகள்

01 எம் ஏ அர்ஷக் அகமட்                                   193
02 எஸ் அப்துர் ரஹ்மான்                                 180
03 எம்.ஏ அப்துர் ரஹ்மான்                               176
04 எம் ஏ ஆர் சீனத் சமா                                     176
05 எ எஸ் எம் ஸப்வான்                                    173
06 எ அபீப் அல்தாப்                                               172
07 எம் எப் நஜ்முல் பதீக்                                     172
08 எம்.அப்துல்லாஹ்                                          171
09 எம்.எம்.மனாசிர்                                               170
10 எம்.எம்.யூசுப் அப்துல்லாஹ்                     169
11 எம்.ஏ சைனப் சிபா                                           167
12 எம்.ஏ எம் நசீப்                                                   166
13 எம் ஐ. பாத்திமா யும்னா                               166
14 எம் ஏ. பத்தான் அகமட்                                  164
15 எ எச். எம் அன்ஸாப்                                       163
16 எம் ஐ. எம் அஷ்பாக்                                        163
17 எம் ஏ ஸைனப் அமானியா                         162
18 எம் என் சிபாக் அப்துள்ளாஹ்                    162
19 எம்.என் எம் நாஸிம                                       159
20 எம்.ஆர்எம் றஸ்மி                                         158

hiluriya grade 5

Published by

Leave a comment