“குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருக்கின்றனர்”

Mahinda_Rajapaksa[1]கொழும்பு: நாட்டில் தற்போது குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அமைச்சுக்களில் அதிகளவான அமைச்சுக்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவிற்கும்மிடையில் பகிரப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுகள் வெறுமையான அமைச்சுக்கள் என்ற நிலையிலேயே இருக்கின்றது.

அரசியல் அமைப்பின் 57வது பிரிவின் படி ஜனாதிபதி, நிதி அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியும். எனினும் அந்த அமைச்சை ஜனாதிபதி தனது பொறுப்பில் வைத்து கொண்டு அரசியல் அமைப்பிற்கு எதிராகவே செற்படுகின்றார்.

நாட்டின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் 75 வீதமான நிதியை கையாளும் பொறுப்பை ஜனாதிபதி தன் கையில் வைத்துள்ளார். இந்த நிதி முழுதும் துறைமுகம், வீதி நிர்மாணத்திற்கே செலவு செய்யப்படுகின்றது.

Mahinda_Rajapaksa[1]

தனி நபர் கையில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதால், நாட்டில் ஊழல், நீதி, ஜனநாயகம், தேர்தல் முதலானவற்றில் தலையீடுகள் அதிகரித்து நாடு சீரழிந்து வருகின்றது.

நாங்கள் இது சம்பந்தமாக தொடர்ச்சியாக சமர்ப்பித்து வரும் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால் மாற்றுவழியை நாடவேண்டிய சூழ்நிலை உருவாகும் அதிகார மயக்கத்தில் இப்பொழுது அரசு தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது.

ஜனாதிபதியை சுற்றியிருக்கும் பரிவாரங்கள் காரணமாகவே ஜனாதிபதியினால், மக்களின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Published by

Leave a comment