Category: Your Kattankudy
-
உறவுகளைப் பேணி, நட்புக்களைக் காப்போம் – ஹாரூன் (ஸஹ்வி)
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: எவ்வருடம் போல இவ்வருடமும் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ் ஹாரூன் (ஸஹ்வி) தனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுஹதாக்கள் குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 1990ஆம் ஆண்டு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயல்களில்; 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன்
-
பிஸ்மி கின்டர்காடனின் சிறுவர் தின நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிஸ்மி கின்டர்காடன் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பிஸ்மி தலைமையகத்தில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.
-
இன்றைய நன்நாளில் தியாகம் என்னும் அதி உயர் விட்டுக் கொடுப்புடன் செயற்பட பிரார்த்திப்போம்- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: மனித குலத்தின் ஒற்றுமைக்கும், தியாகத்திற்கும் முன்மாதிரியாக திகழ்ந்து இஸ்லாத்தின் விட்டுக் கொடுப்புக்களை உலகமறிய செய்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுப்பாடங்களை நாம் பார்க்க வேண்டிய இன்றைய நன்நாளில் தியாகம் என்னும் அதி உயர் விட்டுக் கொடுப்புடன் செயற்பட பிரார்த்தனைகளை
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை மருத்துவப் பிரிவை கணனி மயப்படுத்தும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக குழந்தை மருத்துவ பிரிவை கணனிமயப்படுத்தும் நிகழ்வு 04-10-2014 நேற்று சனிக்கிழமை மட்டு- போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை மருத்துவப் பிரிவில் இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும், தீயணைப்பு வாகன கையளிப்பு நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் தீயணைப்பு வாகன கையளிப்பு நிகழ்வும் 04-10-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
-
தியாகத் திருநாளில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பிராத்திப்போமாக- பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஈகை திருநாளாம் ஹஜ் பெருநாளில் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் உலவிற்கு காட்டித்தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக கடைப்பிடிக்க முஸ்லிம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.
-
ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் – ஹரீஸ் எம். பி.
– ஹாசிப் யாஸீன் கல்முனை: இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
-
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஏற்பாடு தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் அறிவித்தல்
அன்புப் பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி: நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை தொடராக நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
-
உழ்ஹிய்யா இறைச்சி வினியோகம் அல்மனார் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
-டீன்பைரூஸ்- காத்தான்குடி:துல்ஹஜ் மாதத்தின் உழ்ஹிய்யா எனும் ஒப்பற்ற அமல் காத்தான்குடி அல்மானார் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் அதன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் அல்ஹாஜ் AMமும்தாஸ்(மதனி) BA தலைமையின் (04.10.2014 சனிக்கிழமை) பி.ப.01.00 மணியழவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
-
கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் காத்தான்குடியில்
– காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ஆம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும் காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் டோஹா: கத்தாரில் இயங்கும் பலாஹிகள் ஒன்றியத்தின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் நாளை 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை கத்தார் துகான் கடற்கரையில் இடம்பெறவுள்ளதாக கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் அங்கத்தவர் மௌலவி உவைஸ் (பலாஹி) தெரிவித்தார்.