பலத்த சண்டையின் பின்னர் சிரியா-துருக்கியின் முக்கிய போடரைக் கைப்பற்றியது இஸிஸ்

isis– MJ

கோபேன்: சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலே அமைந்துள்ள கோபேன் எனும் முக்கிய இடத்தை இஸிஸ் அமைப்பினர் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர். இச்சண்டையின் பின்னர் அங்குள்ள 3 மாவட்டங்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

சிரியாவில் நிலைகொண்டுள்ள இஸிஸ் அமைப்பை எதிர்த்து, சிரியாவின் குர்த் இனப் போராட்டக்குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. கடந்த இருநாட்களாக இடம்பெற்றுவரும் இவ்வீதிச் சண்டையில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கூட்டுப்படை விமானத் தாக்குதல் நாடகம் கைவிடப்பட்ட நிலையில், குர்திஸ் இனத்தினரை வைத்து தற்பொழுது தாக்குதல் நடாத்த அமெரிக்கா முயற்சிக்கிறது.

சியாவை அழிக்க இஸிஸ் அமைப்பை உருவாக்கிய அமெரிக்கா, தற்பொழுது, இஸிஸ் அமைப்பை அழிக்க, குர்து போராளிகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

isis

Published by

Leave a comment