காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) கடந்த நான்கு வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா நிகழ்வின் தொடரில் இன்று(7) காலை அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் சங்கைக்குரிய உலமாக்கள் மற்றும் பிரமுகர்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் சிறப்பான நடைபெற்றது.
இதன்போது வலது குறைந்தோர், விதவைகள் என்று மிகத்துல்லியமாக தெரிவு செய்து, பயனாளிகளுக்கு உழுஹிய்யா இறைச்சி வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில், அமைப்பினது தலைவர் இல்மி அஹமட்லெவ்வை, பொருளாளர் அல்ஹாஜ் எம்.எம். தாஹிர், உபதலைவர், எம்.ஐ.எம். நஸார், உறுப்பினர் பைறூஸ் (பலாஹி), மற்றும் உறுப்பிர்களுடன், ஜாமியத்துல்பலாஹ் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஜி.எம். அமீன்( பலாஹி), பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் பிரதம பேஸ் இமாம் ஏ.எல் முஸ்தபா மௌலவி, மற்றும் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Published by



Leave a comment