மட்டக்களப்பு: வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக தெற்கு கரையோர பகுதிகளில் இன்று முதல் மழைபெய்யும் என்றும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சியானது வடமேல் மாகாணத்துக்கு பரவக்கூடும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், சில இடங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் பரவலாக இடியுடன் கூடிய மழைபெய்யும். மின்னல் தாக்கம் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Published by

Leave a comment