-டீன்- பைரூஸ்-
காத்தான்குடி; புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்களுக்கான சகல ஏற்பாடுகள் யாவும் அல்லாஹ்வின் உதவியோடு புர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போரத்தின் தலைவா் சமூக சேவையாளர் கௌரவ அல்ஹாஜ் மௌலவி SMM முஸ்தபா(பலாஹி) JP தெரிவித்தார்.
இன்றைய ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்களுக்கான சகல ஏற்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணி செய்யும் காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்கள் அனைவரையும் தான் உளமாற பாராட்டுவதாகவும் தலைவா் மௌலவி SMM முஸ்தபா(பலாஹி) JPதெரிவித்தார்
இன்று அஸா் தொழுகையுடன் ஆரம்பமாகவுள்ள ஊடகவியலாளர்களின் இன்றைய ஒன்று கூடல் நிகழ்வுகள் யாவும் மறுநாள் சுபஹ் தொழுகையுடன் நிறைவடையவுள்ளது என்பது விசேட அம்சமாகும்.
Published by


Leave a comment