காத்தான்குடி: இலங்கையில் காத்தான்குடிக்கு என்றே ஓர் தனிச்சிறப்பு பெருநாள் பாஸாருக்கு இருக்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக காத்தான்குடியில் பெருநாள் காலங்களில் நடைமுறையிலிருந்து வரும் இத்தகைய பெருநாள் பஸார், ‘பொம்பு ரோட்டு’, ‘ஆலை’ எனும் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது.
குறித்த பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி வர்த்தகர்களால் இத்தகைய பெருநாள் பஸார் இடம்பெறுவதும், சிறுவர்கள், பெற்றோர்கள் சென்று வருவதும் ஓர் வழமை.
ஆனால், இப்போதெல்லாம் இதுவும் ஓர் அரசியல் சாயத்துக்குள் அமிழ்த்தப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
நேற்றுவந்த இத்தகைய அரசியல்வாதிகள், பெருநாள் பஸாரை கண்டுபிடித்த ‘விஞ்ஞானி’கள் போன்று ரிபன் வெட்டி ஆரம்பித்துவைக்கும் இவ்வாறான கோமாளித்தனம் காத்தான்குடிக்குரிய பெருநாள் பஸார் சிறப்பை அரசியல் மயமாக்கும் ஓர் நடவடிக்கையாகவே அமைகிறது.
இதற்கு முன்னர் இத்தகைய பெருநாள் பஸார்களை எவரும் திறந்துவைக்கும் நடைமுறையோ, ரிபன் வெட்டும் நடவடிக்கைகளோ, பெருநாள் பஸாரை மூடும் நடவடிக்கையோ நடந்ததில்லை. எதற்கெடுத்தாலும், ரிபட் வெட்டுதல் கலாச்சாரத்திற்கு இன்று சிறுவர் பெருநாள் பஸாரும் சென்றுவிட்டதானது மனவேதனையளிக்கிறது.
இத்தகைய நூற்றாண்டுகால பாரம்பரியத்துடன், காத்தான்குடிக்கு மாத்திரமே உரிய சிறப்பைப்பெற்ற இத்தகைய பெருநாள் சிறுவர் பஸார்களில் மீண்டும் உங்களின் அரசியல் சாயத்தைப் பூசவேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அப்துல் ஸலாம் அகமட் சம்ரி
(வியாபாரி)
காத்தான்குடி 06
Published by

Leave a comment