வாஷிங்டன்: அல் கய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் உடலை ஒரு பையில் போட்டு அதில் 300 இறாத்தல் எடை உள்ள சங்கிலிகளை வைத்து கடலில் வீசியதாக முன்னாள் சி.ஐ.ஏ. தலைவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், அப்போத்தாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொன்றனர்.ஒசாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
முன்னாள் சி.ஐ.ஏ. தலைவரும், பாதுகாப்பு துறை செயலாளருமான லியோன் பனேட்டா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
ஒசாமாவின் உடலை முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய அதை வெள்ளை துணியில் சுற்றி, அரபியில் பிரார்த்தனை செய்யப்பட்டது என்று பனேட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ஒசாமாவின் உடலை கருப்பு நிற பையில் வைத்து அதில் 300 இறாத்தல் எடையுள்ள இரும்பு சங்கிலிகள் வைக்கப்பட்டது. உடல் மிதக்காமல் இருக்கவே சங்கிலிகள் வைக்கப்பட்டன.
உடலை ஒரு வெள்ளை நிற மேசையில் வைத்து அதை கப்பலின் ஓரத்தில் வைத்துள்ளனர். உடல் வைக்கப்பட்ட பை கணமாக இருந்ததால் அதோடு சேர்ந்து மேசையும் கடலில் விழுந்தது. உடல் மூழ்கிவிட்டது ஆனால் மேசை மிதந்தது என பனேட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
Published by

Leave a comment