Category: Your Kattankudy
-
மஹிந்தவின் தேர்தல் மேடைகளில் அமைச்சர்களான ஹகீமும் ரிஷாட்டும் பற்கேற்காததது ஏன்?
– அபூ அஸ்ஜத் கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எட்டாம் திகதி நடை பெவுள்ள நிலையில் இன்னும் எஞ்சியிருக்கும் 17 நாட்களுக்குள் பல்வேறுபட்ட நகர்வுகள் இடம் பெறும் என்று ஜனாதிபதி வேட்பாளர்களும்,அவர்கள் சார்ந்த பேச்சாளர்களும் கூறிவருகின்றனர்.இந்த நிலையில் இன்று கதைப் பொருளாக மாறியிருப்பது அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும்,அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுமே.
-
சிறையில் இருந்து வெளியேறுமா முஸ்லிம் கட்சிகள் ???
– இனியவன் லாகிர் நப்ரிஸ் கொழும்பு: நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு வரலாற்று நிகழ்வு ,அரசியல் முதிர்ச்சி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மோதிக்கொள்ளும் அரசியல் போர் களம் இந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் உச்சகட்ட தேர்தல் வன்முறைகளுக்கும், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் முகம்கொடுத்துள்ளது.
-
அமைச்சர் ரிசாத்தின் கோரிக்கைகள் ஜனாதிபதியினால் முழுமையாக ஏற்பு
கொழும்பு: முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதற்கும் ஏனைய கோரிக்கைகளை அரசுடனான உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
“மு.கா.வை அரசிலிருந்து வெளியேறுமாறு கோருவோர் சுயநல அரசியல்வாதிகள்”
கொழும்பு: முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென தலைமைத்துவத்தை வலியுறுத்தும் எம்.பிக்கள், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் சுயநல நோக்கத்தைக் கொண்டவர்களே என கட்சியின் ஒரு சாரார் சுட்டிக்காட்டுகின்றனர். கட்சியையும் சமூகத்தையும் நடுத்தெருவில் விடுவதற்கான இந்தச் சதிவலையில் தலைமைத்துவம் ஒருபோதும் சிக்கிவிடக் கூடாதென அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-
ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்திற்கு வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பாக அவசர கூட்டம் ஒன்று 20-12-2014 நேற்று சனிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் இரவு உணவுகள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்கள், உறவினர் விடுகளில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகளை சிறி லங்கா ஹிறா பவுன்டேஷன் வழங்கி வருகின்றது. இதனடிப்படையில் 20-12-2014 நேற்று சனிக்கிழமை இரவு 1000 பேருக்கு காத்தான்குடியில் பல்வேறு பகுதிகளில் இரவு உணவுகள் விநியோகிக்கப்பட்டது.
-
காத்தான்குடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை துரிதப்படுத்த ஹிஸ்புல்லாஹ் பணிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை பணித்துள்ளார்.
-
மாஞ்சோலை நஜீம் ஒரு சிறந்த கிராமிய கலைஞன்
– எம்.ரீ.எம். பாரிஸ் மாஞ்சோலை: மட்டக்களப்பு மாவட்டத்தின் மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவின் பதுரியா நகர் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்ட முகம்மது உசன் நஜீம் ஒரு சிறந்த கிராமிய கலைஞனாவார். அவர் தமது சிறு வயதிலிருந்து நகைச்சுவையுடன் வினோதமான பேச்சு, நடை,உடை, பாவனை மூலம் மக்களை மகிழ்விக்கும் தன்மை கொண்டவர். இவரின் கலைப்பணிக்கு களம் அமைத்துக் கொடுத்தது பதுரியா-மாஞ்சோலை இக்பால் இளைஞர்கழகம் ஆகும்.
-
காத்தான்குடியில் 25 மாதர் சங்கத்திலுள்ள 1300 உறுப்பினர்களுக்கு விஷேட அறிவூட்டல் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதர் அமைப்புகள் ஊடாக மாதர்களின் வாழ்வாதாரத்தை உயத்துவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விஷேட திட்டங்களை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இவ் விஷேட திட்டம் இம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
-
பொது மக்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் விடுக்கும் அறிவித்தல்
– ஜுனைட் எம். பஹ்த் காத்தான்குடி: தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், வசிப்பிடங்களில் இருப்பதற்கு கஸ்டமான நிலையிலுள்ள பொதுமக்களின் நன்மை கருதி எமது பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர்களால் பின்வரும் பாடசாலைகள், நலன்புரி நிலையங்களாக ஒழுங்ககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பொது மக்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை
– ஜுனைட் எம். பஹ்த் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்தின் பிரதான வீதி, பழைய கல்முனை வீதி, அல்-அமீன் வீதி, தீன்வீதியும் வெள்ள நீரினால் மூழ்கி பொதுமக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
மஹிந்த குடும்ப ஆடம்பரம்: ‘இங்கிலாந்து மகாராணியின் மாளிகையில் இருந்து பல கோடி ரூபா கொடுத்து குதிரை ஒன்று இறக்குமதி’
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவது குறித்து தற்போது அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அன்றாடம் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி பணத்தில் ஆட்சியாளர் சுகபோக வாழ்க்கை வாழ்வது புதிய விடயம் இல்லை என்றாலும் அது தற்போது பல்லாயிரம் கோடி பண செலவு மற்றும் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பும் வரை வளர்ந்துள்ளது.