ஏறாவூர்: ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பாக அவசர கூட்டம் ஒன்று 20-12-2014 நேற்று சனிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தேவையான உதவிகளையும், நிவாரணத்தையும் துரிதப்படுத்துமாறும் , பகுதியளவிலும்,முழுமையாகவும் சேதடைந்ந வீடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும்,தனக்கும் அறிக்கை சமர்பிக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு ஏறாவூர் முஹாஜிரீன் கிராமத்திலிருந்து ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்திற்கு வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி இரவு உணவுகளையும் வழங்கி வைத்தார்.
இதே வேளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 1000 பேருக்கு இரவு உணவுகள் விநியோகிக்கப்பட்டது.
Published by



Leave a comment