மாஞ்சோலை: மட்டக்களப்பு மாவட்டத்தின் மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவின் பதுரியா நகர் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்ட முகம்மது உசன் நஜீம் ஒரு சிறந்த கிராமிய கலைஞனாவார். அவர் தமது சிறு வயதிலிருந்து நகைச்சுவையுடன் வினோதமான பேச்சு, நடை,உடை, பாவனை மூலம் மக்களை மகிழ்விக்கும் தன்மை கொண்டவர். இவரின் கலைப்பணிக்கு களம் அமைத்துக் கொடுத்தது பதுரியா-மாஞ்சோலை இக்பால் இளைஞர்கழகம் ஆகும்.
கலை மணம் வீசும் ஓடைக்கரை என அழைக்கப்பட்ட பதுரியா- மாஞ்சோலை கிராமத்தில் கலை கலாசார விழும்மியங்களை மேலோங்கச் செய்த குழுவில் இவரும் ஒருவர். இவர் அண்னாவிமார்களிடம் இருந்து முறையாக கற்றுக்கொண்ட கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்த கிராமிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் போன்ற கலைகளை பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பிரதேச இளைஞர்களுக்கும் பயிற்றுவித்ததுடன் தம்மால் முடியுமான வரை மேற்கத்தியவர்களின் ‘பேன்ட் வாத்தியத்தை’ புறந்தள்ளி இஸ்லாமிய வரையறைக்குள் நின்று தாம் கற்றுக்கொண்ட கலைகளை கற்பித்து வருகின்றார்.
தேசிய நிகழ்வுகளிலும் பிரதேசத்தின் கலாசார நிகழ்வுகளிலும் புத்தாக்கதுடன் இளைஞர்களை கொண்டு பிரமுகர்களை வரவேற்கும் வரவேற்பு கோலாட்ட நடனங்களை வழங்கி வருவதுடன் இதனை மறைந்து விடாமல் நவீன கால இளைஞர்களுக்கு இவர் இக்கலைகளை பரிசளித்து வருகின்றமை பாராட்ட தக்கதாகும்.
இவ்வாறான கலை மறைந்து விடாமல் பாதுகாப்பது எம் அனைவரினதும் கடமையல்லவா?
Published by



Leave a comment