காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்கள், உறவினர் விடுகளில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகளை சிறி லங்கா ஹிறா பவுன்டேஷன் வழங்கி வருகின்றது. இதனடிப்படையில் 20-12-2014 நேற்று சனிக்கிழமை இரவு 1000 பேருக்கு காத்தான்குடியில் பல்வேறு பகுதிகளில் இரவு உணவுகள் விநியோகிக்கப்பட்டது.
இதே வேளை காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி நூறானியா வித்தியாலயத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களையும்,ஜென்னத் பகுதி மக்களையும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,’லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி அவர்களுக்கு இரவு உணவுகளையும் வழங்கி வைத்தார்.
இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by





Leave a comment