கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவது குறித்து தற்போது அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அன்றாடம் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி பணத்தில் ஆட்சியாளர் சுகபோக வாழ்க்கை வாழ்வது புதிய விடயம் இல்லை என்றாலும் அது தற்போது பல்லாயிரம் கோடி பண செலவு மற்றும் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பும் வரை வளர்ந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த விடயம் சம்பந்தமாக விமர்சனங்களை முன்வைக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதாரணமாக அதனை மறுத்து விடுகிறார். அமைச்சர் பதவி அல்லது அரசியல் அல்லது இவற்றை விடுத்தல் வேறு வாழ்க்கை இல்லை என்று இருப்பவர்கள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் பிள்ளைகள் பற்றி மிக கௌவரமாக பேசுகின்றனர்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் மக்களின் பணத்தை விரயமாக்கும் விடயங்கள் பற்றிய அறியாத மக்களுக்காக அவற்றை தெரியப்படுத்தும் நோக்கில் சிங்கள இணையத்தளம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் அவரது பேஸ்புக் வலைத்தள கணக்கில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் ரோஹித்தவின் காதலியும் அவருடன் இருக்கின்றார்.
நாட்டின் இளவரசனுக்காக இங்கிலாந்து மகாராணியின் மாளிகையில் இருந்து பல கோடி ரூபா கொடுத்து குதிரை ஒன்று இறக்குமதி செய்யப்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Published by



Leave a comment