கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எட்டாம் திகதி நடை பெவுள்ள நிலையில் இன்னும் எஞ்சியிருக்கும் 17 நாட்களுக்குள் பல்வேறுபட்ட நகர்வுகள் இடம் பெறும் என்று ஜனாதிபதி வேட்பாளர்களும்,அவர்கள் சார்ந்த பேச்சாளர்களும் கூறிவருகின்றனர்.இந்த நிலையில் இன்று கதைப் பொருளாக மாறியிருப்பது அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும்,அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுமே.
இந்த கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இறுதி முடிவுகள் வெளிவராத நிலையில் அரசாங்கத்தில் இன்னும் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் என்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்காமை பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது தொடர்பில் பல கருத்துக்களை காணமுடிகின்றது.இவ்விரு கட்சிகளை பொருத்த வரையும்,இவைகள் அரசாங்கத்தினது உறுப்பு கட்சிகள் அல்ல,இவைகள் தனிச் சின்னங்களை கொண்ட இரு கட்சிகள் என்பதை முதலில் ஞாபகப்படுத்துவது முக்கியமானதொன்றாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தும் இன்று வரையும்,இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அதீத அக்கறை கொண்ட கட்சியாக இவை இருப்பதும் எவராலும் நிராகரிக்க முடியாது.பொபலசேனா பிரச்சினையின் போது மட்டுமல் முஸ்லிம்கள் தொடர்பிலும்,தமிழர்கள் தொடர்பிலும் ஏற்படும் அநீதமான நிலைகளுக்கு எதிராக எப்போதும் தமது பதவிகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் செயற்படக் கூடியவர்களாக இந்த கட்சியின் தலைமை முதல் அத்தள தொண்டர்களை வரை இருந்துவருவதை மறக்கமுடியாது.
சில சந்தர்ப்ப சூழ் நிலைகள் மற்றும் கட்சியின் அனைத்து போராளிகளினதும் வெவ்வேறு கருத்துக்களை தனித்தனியாக கேட்டு தீர்மானங்களை எடுப்பது என்பது சாத்தியமற்ற தொன்று என்பதால் தான் கட்சியானது அதி உயர் பீடம் என்ற ஒரு அமைப்பை தோற்றுவித்து அதில் மக்கள் பிரதி நிதிகளை அழைத்து கருத்துக்களை கேட்பதுடன்,முடிவுகளையும் எடுப்பதை காணமுடிகின்றது.இந்த உயர் சபை எடுக்கும் தீர்மாணம் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் கட்சியின் சரத்தாகும்.நாட்டின் சூழல்,மக்களின் தேவை,உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இங்கு ஆராயப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.இவ்வாறான தொரு கட்சி கோற்பாட்டுக்கு கட்சியின் பிரதி நிதிகள் எல்லோரும் தலைசாய்க்க வேண்டும் என்பதில் எமக்கில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.அவ்வாறு கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படுவோமெனில் அது கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பாதகமாக அமையும் என்பதும் உண்மையாகும்.
இன்றைய கள நிலவரத்தின் படி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம் பெற்றுவருகின்றது.எழுந்தமான முறையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கோ,மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கோ ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் மிகவும் புத்தி கூர்மையுடனேயே பேச்சுக்களை அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.குறிப்பாக அமைச்சர் றிசாதினை தலைமையாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது வடக்கில் இருந்து உருவானாலும் அது நாட்டின் சகல திக்குகளிலும் தமது மக்கள் பிரதி நிதிகளையும்,அபிமானிகளையும்,அங்கத்தவர்களையும் கொண்டதொரு கட்சியாக இன்று மாறியுள்ளது.இலங்கைக்குள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தமது கிளைகளை கொண்டுள்ளது இந்த கட்சியின் பெறுமானத்தினை தெளிவுபடுத்துவனவாக அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு கட்சி அரசுடன் தற்போதும்இணைந்திருக்கும் நிலையில் ஏன் ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.அதற்காக இந்த கட்சி மைத்திரிக்கு ஆதரவாக மறைமுகமாக செயற்படுகின்றது என்றும் எவரும் கணித்துவிட முடியாது.கடந்தகால இலங்கையின் சில சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் காயங்களை ஏற்படுத்தியுள்ளதையும் அமைச்சர் றிசாத் மறந்து செயற்படுபவரும் அல்ல,அதே போல் இந்த சந்தர்ப்பத்தில் தமது கட்சியினை நம்பி வந்த மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஒரவராகவும் அவர் இருக்மாட்டார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஒரு கள ஆய்வினை செய்யாமலும் இருந்திருக்காது.குறிப்பாக ஜனாதிபதி தங்களை சந்திக்க அழைத்த போது தமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி எமது முஸ்லிம் சமூகத்தின் தேவைகள்,பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளிட்ட 20 அம்சக் கோறிக்கையினை தயார்படுத்தி அதனை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.அதற்கான சாதகமான பதில்களும்,நிறைவேற்றுவதற்கு காலதாமதமான பதில்களும் வெளிவரவில்லை.இந்த நிலையில் தான் அமைச்சர் றிசாத் கட்சி தலைவர் என்ற வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டி நேரிட்டது.
அமைச்சர் றிசாதினை பொருத்த வரை வடக்கு மக்கள் மட்டும் தான் நன்மையடைய வேண்டும் என்று எண்ணினால் அவரது சுய விருப்பத்தின் பேரில் எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உடனடியாக தமது ஆதரவினை வழங்கியிருக்க முடியும்.ஆனால் தமது வடக்கு முஸ்லிம் சமூகம் அகதிகளாக இருந்தும்,அடிப்படை வசதிகளின்றியும்,இனவாத சமூக சிந்தணையாளர்களுக்கு மத்தியிலும்,முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் பஞ்சோந்திகளின் சதிகளையும் எதிர கொண்டும் இன்று வரை( இந்த கட்டுரை எழுதும் வரை )அமைதியாக இருக்கின்றார்கள் என்றால் அது இந்த நாட்டில் அமைச்சர் றிசாத் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ள மக்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பும்,மறியாதையும் என்பதை அறிந்திருக்க வேண்டும்,இதனை குறைத்து மதிப்பிடுபவர்களும்,முகப்பு நுால்களில் இயலாத்தன்மையினையும் வெளிப்படுத்தும் முகமூடி அணிந்த புல்லுருவிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சமூகத்தின் பாதுகாப்பு என்பது இன்றியமையாதது என்பதை குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.தமது அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மட்டும் சரி என்றும் எதிர்கருத்துக்களை கொண்டுள்ளவர்கள் என்பதற்காக முறையற்ற பத்வாக்களை கூறுவது தொடர்பில் அவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.தமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் உன்ற மமதை கொண்டு செயற்படுவது அவர்களுக்கு ஆபத்தாகிவிடும்(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) என்பதையும் ஒரு கனம் சிந்தித்து தமது கருத்துக்களை,பேச்சுக்களை அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.இன்று அரசியலில் நண்பர்களாக இருப்பார்கள் நாளை எதிரிகளாக இருப்பார்கள்,மறு நாள் நண்பர்களாகிவிடுவார்கள்.
எது எப்படி இருந்தாலும் அமைச்சர் றிசாத் அவர்கள் எடுக்கும் முடிவு அது சமூகத்திற்கும்,நாட்டுக்கும் நல்லதாகவும்,ஏனைய பெரும்பான்மை மற்றும் தமிழ் சமூகங்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் என்பதற்கு இன்னும் எடுக்கப்படாத முடிவில் தங்கியிருக்கின்றது.என்பது தெளிவாகின்றது.உணவுக்கு சுவையூட்டி இடுவது போன்று அவ்வப் போது சிலர் அவர்கள் சார்ந்த கருத்துக்களை முன்வைப்பார்கள்,முக நுாலில் தமது அதிக விருப்பத்துக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள்,இவைகளை வைத்து மட்டும் எந்த தீர்மானத்தையும் எடுத்துவிடலாகாது என்பது எனது கணிப்பீடாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று இந்த நாட்டு சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்பது உண்மை அதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இந்த கட்சி இருக்க வேண்டும் என்து எமது அபிப்பிராயமாகும்.
Published by


Leave a comment