காத்தான்குடியில் 25 மாதர் சங்கத்திலுள்ள 1300 உறுப்பினர்களுக்கு விஷேட அறிவூட்டல் நிகழ்வு

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதர் அமைப்புகள் ஊடாக மாதர்களின் வாழ்வாதாரத்தை உயத்துவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விஷேட திட்டங்களை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இவ் விஷேட திட்டம் இம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ் விஷேட திட்டத்தின் கீழ் சுயதொழில் துறை மற்றும் தொழில் துறைகளில் ஊக்குவிக்க விஷேட பயிற்சிகள் ,வாழ்வாதார உதவிகள்,அறிவூட்டல் நிகழ்ச்சிகள் மற்றும் இலகு கடன் வசதிகள் என்பவற்றை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

hizbullah

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு நகர் ,மண்முனைப் பற்று ஆரையம்பதி ,காத்தான்குடி ஆகிய பிரதேச யெசலாளர் பிரிவிலுள்ள 25 மாதர் சங்கத்திலுள்ள 1300 மாதர்சங்க உறுப்பினர்களுக்கு விஷேட அறிவுட்டல் நிகழ்வொன்று 20-12-2014 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

hizbullah masoor moulana

இவ் விஷேட அறிவூட்டல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்,அப்துல் மஜீத்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்குகான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,அல்ஹாஜ் எம் .பஷிர்,கட்சி முக்கியஸ்தர்கள்,பெரும் திரளான மாதர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

hall

Published by

Leave a comment