Category: Your Kattankudy
-
பாம் வீதி செப்பனிடுதல் தொடர்பான முரண்பாட்டினை விசாரணை செய்யக்கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு கடிதம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் / டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பாம் வீதி செப்பனிடுதல் தொடர்பான முரண்பாட்டினை விசாரணை செய்யக்கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
-
சுதந்திர தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வுகள்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியின் பல இடங்களில் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன பாடசாலைகள் மைதானங்கள் பாதையோரங்கள் மற்றும் ஆற்ரோரங்களில் இடம்பெற்றன.இவற்றினை படங்களில் காணலாம்.
-
போர் முடிந்ததால் மட்டும் தேச ஒற்றுமை ஏற்படவில்லை: ஜனாதிபதி மைத்திரிபால
கொழும்பு: இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் அதன் முலம் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழும் மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்க முடியவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
-
தைவான் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: 12 பேர் பலி
தைபெய்: தைவான் நாட்டின் தலைவர் தைபெய்யின் ட்ரான்ஸ் ஏசியா நிறுவன விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விமானம் விபத்திற்குள்ளானபோது, 58 பேர் அதில் பயணம் செய்தனர். கீலங் என்ற ஆற்றுக்குள் விழுந்த இந்த விமானம், தற்போது பாதி மூழ்கிய நிலையில் ஆற்றுக்குள் கிடக்கிறது.
-
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடவடிக்கைள் தீவிரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் என்பன இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் 04-02-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.
-
67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தினால் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தினால் காத்தான்குடி தள வைத்தியசாலையிலுள்ள விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 04-02-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
-
நாட்டின் நல்லாட்சி மாற்றத்தை அடுத்து அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் சுதந்திர தின நிகழ்வுகள்
ஹாசிப் யாஸீன் அம்பாறை: புதிய ஆட்சி மாற்றத்தை அடுத்து அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் 67வது சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலங்களில், வைத்திசாலைகளில், அரச, தனியார் நிறுவனங்ளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
-
4 வது வருடத்துக்குள் தமது பாதத்தை எடுத்து வைக்கும் ‘யுவர் காத்தான்குடி’ இணையத்தளத்திற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வாழ்த்து
இர்ஷாத் றஹ்மத்துல்லா காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக ஊடகங்களின் செயற்பாடுகள் இருந்த போது, அதற்கு போட்டியாக பல்வேறு சவால்களை சந்தித்து சமூகத்தின் உரிமை தொடர்பில் நாட்டுக்குள்ளும், கடல் கடந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் உண்மையினை வெளிக் கொண்டுவந்த இணையத்தள ஊடக வரிசையில் யுவர் காத்தான்குடியும் உள்ளடங்குவதை இந்த தருனத்தில் நன்றியுடன் நினைவு கூறுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்ருமான றிசாத் பதியுதீன் தொடர்ந்தும் சத்தியத்துக்கும் உண்மைக்குமாக தமது…
-
பிஸ்மி குழுமம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி கிளை, PMGG, NFGG ஆகியவற்றின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 04-02-2015 இன்று புதன்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
-
KCDA யின் ஏற்பாட்டில் 67வது தேசிய சுதந்திர தின விழா
ஊடகப்பிரிவு KCDA / எம்.ரீ.எம்.பாரிஸ் மீராவோடை: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட இலங்கை தாய்த் திருநாட்டின் 67வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வு 2015.02.04ஆந் திகதி புதன்கிழமை மட்/மம/ மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் KCDA யின் ஆலோசகரான ஜனாப். ஐ.எம். றிஸ்வின் அவர்களின் தலைமையில் காலை 07.30 மணிக்கு நடைபெற்றது.
-
காத்தான்குடியில் சுதந்திரதின நிகழ்வுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04-02-2015 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.