67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தினால் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

unnamed1பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தினால் காத்தான்குடி தள வைத்தியசாலையிலுள்ள விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 04-02-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம். சஹீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசிர்தீன், காத்தான்குடி குபா பள்ளிவாயல் தலைவர் கே.எல்.எம். மன்சூர், வைத்திய தாதியர்கள், கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பதில் தலைவர் எம்.எச்.எம். அபீப் அதன் செயலாளர் எம்.எஸ்.எம். அயாஸ் அதன் பொருளாளர் எம்.ஏ.எம். ஆதீல் உட்பட கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் கல்வி மற்றும் சுகாதாரம், சமயம் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment