காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக ஊடகங்களின் செயற்பாடுகள் இருந்த போது, அதற்கு போட்டியாக பல்வேறு சவால்களை சந்தித்து சமூகத்தின் உரிமை தொடர்பில் நாட்டுக்குள்ளும், கடல் கடந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் உண்மையினை வெளிக் கொண்டுவந்த இணையத்தள ஊடக வரிசையில் யுவர் காத்தான்குடியும் உள்ளடங்குவதை இந்த தருனத்தில் நன்றியுடன் நினைவு கூறுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்ருமான றிசாத் பதியுதீன் தொடர்ந்தும் சத்தியத்துக்கும் உண்மைக்குமாக தமது பணியினை ஆற்ற தாம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
4 வது வருடத்துக்குள் தமது பாதத்தை எடுத்து வைக்கும் யுவர் காத்தான்குடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேற்கொண்டவாறு கூறியுள்ளார். இலங்கை முஸ்லிம்களுக்கு தனியானதொரு ஊடகம் இல்லாத போது அந்த இடைவெளியினை நிரப்பும் வகையில் உருவான இணையத்தள ஊடகத்தின் முக்கியமானதொன்றாக யுவர் காதத்தான்குடியினை கூறமுடியும்.
சில ஊடகங்கள் தொடர்ந்தேச்சையாக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராக செயற்பட்ட போது அதற்கு சமாந்தரமாக நின்று முஸ்லிம்களின் உணர்வகளை பிரதி பலிக்கும் ஒன்றாக இந்த இணையத்தளம் இருந்துவந்துள்ளது. தன்னலம் பாராது சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் பல தியாகங்களுடன், குறிப்பாக 24 மணித்தியாலங்களும் தேவையானவற்றை உரிய முறையில் பதிவேற்றம் செய்த ஒரு இணையத்தளமாக யுவர் காத்தான்குடியினை கூறுவதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த இணையத்தளத்தின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் பாராது செய்திகளை அனுப்பும் இணையத்தளத்தின் செய்திளார்கள் அனைவருக்கும எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே வேளை கடந்த காலங்களை போன்று தங்களது இணையத்தளத்தின் சேவைகள் இடைவிடாது துணிவுடன் சமூக சிந்தனையுடன், இன ஒற்றுமைக்குமாக செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதுடன், தங்களது இந்த ஊடக பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment