காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04-02-2015 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் முதல் நிகழ்வு காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அல் மனார் அர்றாஸித் மண்டபத்தில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த சுதந்திரன வைபவம் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப முன்றலிலும் ,ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அதற்கான மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த சுதந்திரன வைபவத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன் காத்தான்குடி கலாசார மத்திய நிலையத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அதன் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment