Category: Your Kattankudy
-
ஓமந்தையில் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தம்
யாழ்: வவுனியா ஓமந்தை வீதிச் சோதனை முகாமின் சோதனை நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் இயல்பாகப் போக்குவரத்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சு விடுத்த உத்தரவொன்றுக்கு அமைவாக திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
-
போக்கோஹராமை கத்திகளுடன் எதிர்த்த மக்கள்
லண்டன்: நைஜீரியாவின் வட மேற்கு நகரான பாகாவை போகாஹராம் ஆயுததாரிகள் தாக்கி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், அந்த தாக்குதலின் போது எவ்வாறு அந்த தாக்குதலாளிகளுக்கு எதிராக வெறும் வெட்டுக்கத்திகளை மாத்திரம் பயன்படுத்தி தாம் சண்டையிட்டோம் என்பதை அந்த ஊர் மக்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
-
காங்கேயனோடை: சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய பஸ் சேவை ஆரம்பம்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காங்கேயனோடை: நாளை இடம்பெறவுள்ள நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி இ.போ.ச. சாலையினால் கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான புதிய பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
-
குவைத்தில் நடைபெற்ற ஏழைகளுக்கான ஆடைகள் சேகரிப்பு முகாம்
– K-TIC குவைத்: குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக ‘ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், ஃபலஸ்தீன் மற்றும் குவைத்’ உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக
-
சுதந்திர சதுக்கத்தில் தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகள்
– இஸ்மாயில் ஏ அஸீஸ் கொழும்பு: நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் நாளை நண்பகல் 1.30 மணியலவில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
-
PMGG மற்றும் NFGG இணைந்து நடாத்தும் சுதந்திர தின விழா
காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்து நடாத்தவுள்ள இலங்கையின் 67வது சுதந்திர தின விழா நிகழ்வுகள் நாளை (04.02.2015) புதன்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு காத்தான்குடியில் நடைபெறும்.
-
காத்தான்குடி வரியிறுப்பாளர் சங்கத்தின் ஒன்று கூடல் நாளை கடற்கரை முன்றலில் நடைபெறும்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள குடியிருப்பு ஆதனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவு இவ்வருடம் சோலை வரி பலமடங்கு அதிகரிக்கப்பட்டு நகர சபையினால் அறவிடப்பட்டு வருவது தொடர்பாக வரியிறுப்பாளர்கள் தமது விசனத்தையும், ஆட்சேபனைகளையும் பரவலாகத் தெரிவித்து வருவதாக காத்தான்குடி
-
மரக்கறி விற்பனை சந்தையில் விற்பனை மோசடிகள்
– ஜுனைட் எம். பஹ்த் காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள அதிகமான மரக்கறி விற்பனை சந்தையில் விற்பனை மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம்தெரிவிக்கின்றனர். 1கிலோ மரக்கறி100ரூபா க்கு விற்பனை செய்யபடும் போது, 1/2கிலோ மரக்கறி 60ரூபாவிற்கும், 1/4 கிலோ, 40ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது மரக்கறிமொத்த விற்பனையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப் படுகிறது.
-
புதிய காத்தான்குடியில் வீதியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
– எம்.எச்.எம்.அன்வர், புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பரீட் நகரிலுள்ள மஸ்ஜிதுல் மனாறுல் ஹூதா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (03.02.2015) காலை பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடி வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஒரு மாத காலமாக திருத்தப்படாதுள்ள வடிகான் மூடி
காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியிலிருந்து முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வீதிக்குத் திரும்பும் சந்தியிலுள்ள வடிகான் மூடியொன்று உடைந்து, சுமார் ஒரு மாத காலமாக சீரமைக்கப்படாமல் பொதுமக்களால் அபாய அறிவிப்பு அடையாளம் காட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு அருகிலும் வடிகானுக்குரிய மூடிகள் இடப்படாமல் உள்ளன.
-
மட்டக்களப்பு மாவட்ட அரச வெளிக்கள ஆண் உத்தியோகத்தர்களுக்கான தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு
எம்.எச்.எம்.அன்வர் மட்டக்களப்பு: இன்று மாவட்ட அரச அதிபர் பி.எஸ் எம் சார்ளஸ் தலைமையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டார்.
-
புதிய காத்தான்குடியில் நாளை உண்மையைக் கண்டறிவதற்கான மக்கள் ஆர்ப்பாட்டம்!
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி, பரீட் நகர் பாம் வீதியில் அமைந்துள்ள மனாறுல் ஹுதா பள்ளிவாசல் முன்றலில் இன்ஷா அழ்ழாஹ், நாளை (03.02.2015) செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு நடைபெற பரீட் நகர் மக்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்’ தொடர்பாக இன்று மாலை காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்ட பிரசுரம்.