காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் என்பன இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் 04-02-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு நடவடிக்கையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசிர்தீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர், காத்தான்குடி பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் றபீக், பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மதுல்லாஹ், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பிரிவு பொறுப்பதிகாரி எஸ். செல்வராஜா உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இதன் போது வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் டெங்கு நோயின் விபரீதங்கள் தொடர்பாகவும் வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment