பிஸ்மி குழுமம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி கிளை, PMGG, NFGG ஆகியவற்றின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 04-02-2015 இன்று புதன்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி பிஸ்மி குழுமத்தின் ஏற்பாட்டில் புகைத்தலற்ற போதைப்பொருளற்ற, சிறுவர் துஷ்பிரயோகமற்ற சுதந்திர இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் மகுடம் தாங்கி சிறுவர்களுக்கான சுதந்திர தின நிகழ்வு பிஸ்மி தலைமைக் காரியாலத்தில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது இதில் தேசப்பற்றை பிரதிபலிக்கும் பல்வேறு சிறுவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு அதன் காத்தான்குடி காரியாலத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான சிப்லி பாரூக் தலைமையில் இடம்பெற்றது. இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்து ஏற்பாடு செய்த 67 வது சுதந்திர தின நிகழ்வு நல்லாட்சியை நோக்கிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் தவிசாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் செயலாளர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் (இஸ்லாஹி), அதன் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அதற்கான மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment