அம்பாறை: புதிய ஆட்சி மாற்றத்தை அடுத்து அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் 67வது சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலங்களில், வைத்திசாலைகளில், அரச, தனியார் நிறுவனங்ளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இச்சுதந்திர தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள், வாகனங்களில் தேசியக் கொடிகள் பரக்கவிடப்பட்டதுடன், இரத்தான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
67வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதில் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
67வது சுதந்திர தின நிகழ்வு கல்முனை மாநகர சபையில் ஆணையாளர் ஜே. லியாகத் அலி தலைமையில் இடம்பெற்றது. இதில் காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின நிகழ்வுகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 67வது சுதந்திர தின நிகழ்வு மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட முன்னணிக் கழகங்களின் வீரர்கள் கலந்து கொண்டனர்.
67வது சுதந்திர தின நிகழ்வு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த் வைத்தியசாலையில் டாக்டர் எம்.சீ.எம். மாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இதில் வைத்தியர்கள், தாதியர்கள் என கலந்து கொண்டனர்.
67வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தலைமையில் இடம்பெற்றது. இதில் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை கல்முனை ஸாஹிறா கல்லூரியிலும் நாட்டின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் பீ.எம்.எம். பதுர்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பாடசாலை பழைய மாணவர் சங்க, அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இரத்ததான நிகழ்வும், மர நடுகையும் இடம்பெற்றது.
Published by

Leave a comment