Category: Your Kattankudy
-
நாமல் ராஜபக்சவை நிதி மோசடி விசாரணை பொலிஸ் பிரிவில் ஆஜராகும்படி அறிவிப்பு
ஹம்பாந்தோட்டை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளருமான நாமல் ராஜபக்சவை நிதி மோசடி விசாரணை பொலிஸ் பிரிவில் ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 12ஆம் தேதி தன்னை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சமூகமளிக்கும்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
-
சின்னப்பள்ளி சதுக்கத்தில் இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு
– NFGG காத்தான்குடி: சின்னப்பள்ளி சதுக்கத்தில் நேற்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
-
“எதிரொலி” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்கிறார்
NFGG கொழும்பு: சக்தி தொலைக்காட்சியில் இன்று 10.08.2015 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள “எதிரொலி” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் பங்கேற்கின்றார்.
-
அகதி சமூகத்தின் விமோசனத்திற்காகத் தான் நான் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டேன்”: மருதமுனையில் றிசாத்
– மருதமுனையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மருதமுனை: மறைந்த அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணியினையும்,கொள்கையினையும் மறந்து செயற்படும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நம்பி மருதமுனை மக்கள் மீண்டும் அவர்களுக்கு வாக்களிப்பீ்ர்கள் என்றால்,எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு நீங்கள் கைசேதப்பட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
-
“அரக்கன் கம்பனி”யின் கொலை: வசீம் தாஜூடினின் ஜனாஸா சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.
கொழும்பு: பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் ஜனாஸா சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது. தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
-
இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடுத்தர அளவிளான கோழிப் பண்னையாளர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 07 வெள்ளிக்கிழமை பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பிரதேசத்திற்கு புதிய அரச கால்நடை வைத்திய அதிகாரி நியமனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அண்மையில் புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்.
-
மட்டக்களப்பு மாவட்ட ஆரம்பக் கணிப்பு
– இனியவன் மட்டக்களப்பு: எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஆதரவுகள் எவ்வாறு தற்போது காணப்படுகின்றன எனும் ஆரம்பக்கட்டக் கணிப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இங்கு மக்களின் ஆதரவு வரிசைப்படி நிழற்படுத்தப்பட்டுள்ளன.
-
தங்களுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த 19 பெண்களைக் கொலை செய்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள்!
பக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த 19 பெண்களை கொலை செய்துள்ளனர்.ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஏராளமான பெண்களை கடத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன், செக்ஸ் அடிமை சந்தையில் விற்றுவிடுகிறார்கள். இந்நிலையில் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுல் நகரில் பிடித்து வைத்திருந்த பெண்களில் 19 பேர் அவர்களுடன் உறவு கொள்ள மறுத்துவிட்டனர்.
-
“ஊருக்கொரு எம்.பி. வேண்டும்”
MJ காத்தான்குடிக்கொரு எம்.பி. வேண்டும் கல்குடாவுக்கொரு எம்.பி. வேண்டும் எமது பிரதிநிதித்துவம் காக்கப்படவேண்டும் அது எம் வரலாற்றில் பதியப்படவேண்டும்
-
ஜனாதிபதி பாதுகாப்பில் சந்தேகம்: பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டது!
கொழும்பு: ஜனாதிபதியின் பாதுகாப்பு சம்பந்தமாக கடந்த காலங்களில் நடந்த சில சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜனாதிபதிக்கான பாதுகாப்பு பொறுப்பை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.