வாக்கு கேட்டு வாரம்.!

knocking doorகட்டு கட்டா
கட்டுகதை வைச்சிருக்கன்…
காத கொஞ்சம்
கெட்டியாக கொடுங்கோ.!!!

வாக்கு கேட்டு
வாரம் நாங்க…
வக்கில்லா மக்கள்
வாழ்வை நலமாக்க.!!!

வக்கீலுக்கு நான்
படிச்சும்…
வங்குரோத்தில் நிற்கன்
வாக்களிங்க எந்தனுக்கு.!!!

கட்டடத்த கட்ட சொன்னா
கோபுரமா கிளப்பிடுவன்…
உங்க வாக்க மட்டும்
கணிக்கத்தான் தெரியலயே.!!!

சீனியோடு நொந்து வந்தா
வீதியில நடக்க வைச்சன்…
இப்ப என்னையே
நடக்க வைக்குறீங்களே…
டாக்டரு நானில்லையா.!!!

knocking door

பட்டம் பலதோடு
பக்கத்து ஊருக்கு…
மேடை ஏற போனா
விரசிவிரசி அடிக்காங்க.!!!

நல்லசேவை நாம செஞ்சா…
வாக்கு என்ன உசிரையே
நம்ம சனம் தந்திடுமே…
இல்லாம நாம வந்தா
நாயாத்தான் தெருவெல்லாம்
திரியனுமே… அலையனுமே.!!!

இனி…
நாரிப்போகும் நம்ம
நடிப்பு எல்லாம்…
ஆடிப்போவோம்
அப்பாவி மக்களால.!!!

எம்ரிஎம்.யூனுஸ்
காத்தான்குடி.

Published by

Leave a comment