கொழும்பு: ஜனாதிபதியின் பாதுகாப்பு சம்பந்தமாக கடந்த காலங்களில் நடந்த சில சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜனாதிபதிக்கான பாதுகாப்பு பொறுப்பை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் சார்பானவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து என்பதை பாதுகாப்பு பிரதானிகளும் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதனடிப்படையில், ஐயாயிரம் படையணியை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளை காவற்துறை நிலையங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வில் சிறப்பு அதிரடிப்படையினர் தமது முதலாவது பாதுகாப்பை அவருக்கு வழங்கியிருந்தனர்.
Published by


Leave a comment