“அரக்கன் கம்பனி”யின் கொலை: வசீம் தாஜூடினின் ஜனாஸா சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.

thajudeen (2)கொழும்பு: பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் ஜனாஸா சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது. தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாஸா தோண்டி எடுக்கும் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய  ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது.

thajudeen (2)

கடந்த 2012 இல் கார் விபத்தில் கொல்லப்பட்டார் என்று அப்போதய மகிந்த அரசாங்கத்தால் சொல்லப்பட்டது. இச்சம்பவம் கடந்த மாதம்வரை விபத்து எனவே பதியப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இச்சம்பவம் கொலை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது கொலை என மகிந்தவும் ஏற்றுக்கொண்டிருந்தமை தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது.

thajudeen (3)

வஸீம் தாஜூனின் கொலைக்கு மகிந்தவின் புதல்வர்கள் மீது சந்தேகம் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

thajudeen

Published by

Leave a comment