Category: Your Kattankudy
-
ஹிஸ்புல்லாஹ்வுக்கே ஆதரவளிக்க மௌலவி அப்துர் ரஊப் கோரிக்கை
காத்தான்குடி: கடந்த வாரம் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செய்துகொண்ட தேர்தல்-மார்க்க ஒப்பந்தத்தின் பின்னர் பத்ரிய்யாவுக்குள் ஏற்பட்டிருந்த சலசலப்புக்கள் குறையாவிட்டாலும், அவசர அவசரமாக தனது ஆதரவாளர்களை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்குமாரு மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் மிஸ்பாஹி சற்று முன்னர் மஞ்சல் நிற துண்டுப்பிரசுரம் மூலமாக அறிவித்திருக்கிறார்.
-
ஐ.எஸ். பிரதேசத்துக்குள் குழந்தைகளைக் கொண்டு போக எத்தனித்த நபர்களுக்கு கால்கட்டு அணிவிப்பு!
லண்டன்: சிரியாவில் இஸ்லாமிய அரசின் பகுதிக்குள் ஆபத்தான சூழ்நிலையில் தமது பிள்ளைகளை கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் இரு குடும்பங்களின் வயதுவந்த உறுப்பினர்களுக்கு மின்னணு கண்காணிப்பு பட்டிகளை அணிவிக்குமாறு உத்தரவிட்ட பிரிட்டிஷ் நீதிபதி ஒருவரின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் மைக்கல் கிளார்க்!
AF-90 லண்டன்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் மைக்கல் கிளார்க் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணி தலைவராக செயல்பட்ட மைக்கல் கிளார்க் சமீபத்தில் முடிந்த உலக கோப்பை இறுதி போட்டி வெற்றியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
-
ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து
SHM லண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இங்கிலாந்து-அவுஸ்திரேலியா நடுவேயான சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் நடப்பாண்டு டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது.
-
ஷிராந்தி ராஜபக்ஸவின் வாகனம் கைப்பற்றப்பட்டது
கொழும்பு: மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட போது அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்திச் செல்லப்பட்ட “சிரிலிய சவிய” அமைப்பிற்கு சொந்தமான வாகனம் இரகசிய காவல்துறையினரைால் கைப்பற்றப்பட்டுள்ளது. றகர் வீரர் வசீம் தாஜுடீனினை கொலை செய்வதற்காக இவ்வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காத்தான்குடியில் 24 மணி நேர மருத்துவ சேவை வழங்க பிரதான வீதியில் ‘ஹபீபா மெடிகல் சென்டர்’ உதயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த 24 மணி நேரமும் இயங்கக் கூடிய சகல வசதிகளுடனும் கூடிய மருத்துவ நிலையம் தற்போது ‘ஹபீபா மெடிகல் சென்டர்’ எனும் நாமத்தில் உதயமாகியுள்ளது. காத்தான்குடி பிரதான வீதியில் முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்ட சூழலில் அமைந்துள்ள ஹபீபா மெடிகல் சென்டர் கடந்த 02.08.2015 அன்று உத்தியோபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
-
“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் மக்களின் நன்மைகளுக்காகவே அர்ப்பணிப்போம்”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG காத்தான்குடி: “மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட சகல வரப்பிரசாதங்களையும் மக்கள் பயன்பெறும் விதமாக பொது நலன்களுக்கே அர்பணிப்போம்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
இது தேர்தல் காலம்
– பிரகாசக்கவி சோடாபோத்தலின் மூடிக்குள் தடுக்கிவிழுந்ததில் நிகழ்ந்த தற்கொலை யாரோ நாலுபேர் காறித்துப்பியதில் இருண்ட வானம் கிணற்றுநீர் உருப்பெருத்ததில் உருவான சிறுகுளம் நாயொன்று நக்கிக்குடித்ததில்
-
வவுனியா மாணவி தற்கொலை: விசாரணைகள் முடியும் வரை அதிபர் இடைநிறுத்தம்
வவுனியா: க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டை கிடைக்க வில்லை என்ற காரணத்தினால் மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் பாடசாலை அதிபர் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக ளை முன்னெடுப்பதற்காக குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கல்வி அமைச்சு நேற்று பணிப்புரை வழங்கியுள்ளது.
-
“தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கட்சியைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்”: சந்திரக்காவிடம் மஹிந்தவின் ஊடகப்பிரிவு வேண்டுகோள்!
கொழும்பு: தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கட்சியைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.சந்திரிகா குமாரதுங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த வேணடுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கும் பழுதடைந்த போக்கு உணவுகள் விநியோகம்
நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் 2000 ரூபா பெறுமதிக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்கள் பாவனைக்குதவாத நிலையில் பழுதடைந்து காணப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
-
NFGGயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெண்கள் வாரி வழங்கும் தங்கக் கொடை
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் கூட்டணியில், NFGGயின் சார்பில் மரச்சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடுகின்ற பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பெண்கள் பலரும் தங்க நகைகளை தமது தேர்தல் நன்கொடைகளாக வழங்கி வருகின்றனர்.