காத்தான்குடிக்கொரு எம்.பி. வேண்டும்
கல்குடாவுக்கொரு எம்.பி. வேண்டும்
எமது பிரதிநிதித்துவம் காக்கப்படவேண்டும்
அது எம் வரலாற்றில் பதியப்படவேண்டும்
அபிவிருத்திகள் அதிகரிக்க வேண்டும்
அயலவர்பார்த்து வாயடைக்கவேண்டும்
ஏழைகள் பரம ஏழைகளாக வேண்டும்
ஒன்றுமில்லாதவன் உயர்ந்தெழவேண்டும்
ஒரு கிலோமீற்றர் ஊருக்குள்
நூறு தேர்தல் கூட்டங்கள்
பொய்யையும் ஊழலையும் ஊழையிட
பலபத்து மேடைப் பேச்சாளர்கள்
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்
கடந்த நாற்பது வருடங்கள் இதுதான் சரித்திரம்
வேலைவாய்ப்பு வேண்டும்
இனத்துக்கு ஓர் எம்.பி. வேண்டும்
இருப்பிடத்துக்கு உத்தரவாதம் வேண்டும்
உரிமைக்கு குரல்வேண்டும்
தமிழ்மக்களின் ஒருமித்த குரல் இது
அவர்கள் பெறுவார்கள்! அதிகமாக
வெற்றிபெறுவார்கள்!!

Leave a comment