Category: Your Kattankudy
-
அணித்தலைவர் பதவியிலிருந்து மலிங்க நீக்கம்: மெதீவ்ஸ் தெரிவு!
அணி விபரம் கொழும்பு: ரி20 உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் அஞ்சலோ மெத்திவ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (07) நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை அணியின் உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவில் சங்கா, களு
கொழும்பு: அரவிந்த டி சில்வாவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியமான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர்குமார் சங்கக்கார, முன்னாள் வீரர்களான ரொமேஷ் களுவித்தாரன, ரஞ்சித் மதுருசிங்க மற்றும் லலித் களுபெரும ஆகியோரும் இந்தத் தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
-
மட்டக்களப்பில் குடியிருப்போர் விவரங்களை பொலிஸார் கோருகின்றனர்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது பொலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
-
ஜனாதிபதி மைத்திரி என்பதற்கு “ஜனாதிபதி மஹிந்த” என கூறிய அமைச்சர்
கொழும்பு: வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் சிறிது நேரத்தின் பின்னர் சுயநினைவுக்கு வந்து தவறை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை நினைவுபடுத்தினார்.
-
அஸாருதீன் சாதனையை சமன் செய்தார் டோணி
SHM டாக்கா: இந்திய அணி ஆசியாக் கோப்பையை 6வது முறையாக வென்றுள்ளது. இவ்வெற்றியில் டோணிக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. அதாவது இந்தக் கோப்பையை அஸாருதீன் தலைவராக 2 முறை வென்றிருந்தார். ஒரு இந்தியக் தலைவர் அதிக அளவிலான ஆசியக் கோப்பையை வென்ற பெருமை அஸாரிடம் மட்டுமே இருந்து வந்தது.
-
மின்னஞ்சலைக் கண்டுபிடித்த ரேய் டொம்லின்ஸன் காலமானார்
நியுயோர்க்: மின்னஞ்சலை கண்டுபிடித்த அமெரிக்கரான, ரேய் டொம்லின்ஸன், தனது 74ஆவது வயதில் காலமானார்.ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வலையமைப்பினூடாக தகவல் அனுப்பும் யோசனையை, 1971ஆம் ஆண்டு இவர் முன்வைத்தார். அமெரிக்க பொஸ்டனில் கம்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றியபோது, முதலாவாது நவீன மின்னஞ்சலையும் அவர் எழுதினார்.
-
மஹிந்த அரசு பெற்ற ரூ.8,47,500 கோடி செலுத்த வேண்டிய நிலையில் அரசு
கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்ற 8,47,500 கோடி ரூபா கடனை செலுத்தவேண்டிய கடப்பாடு தமது அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாத்திரம் ஆயிரத்து 142 பில்லியன் கடனை செலுத்தவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
-
6வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா
MJ டாக்கா: பங்களாதேஷ் டாக்கா மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பங்களாதேஷ்-இந்தியா அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா 8 விக்கட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சிக்கண்டர் தவாண் 60, மற்றும் வீராட் கோளி 41 ஆகியோரது சிறந்த இணைப்பாட்டத்தில் பங்களாதேஷ் சொந்த மண்ணில் மீண்டும் தோல்வியைத் தழுவியது.
-
ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: 15 ஓவர்களாகக் குறைப்பு
– MJ டாக்கா: பங்களாதேஷ் டாக்காவில் இடம்பெறும் ஆசியக்கிண்ண இருபது20 போட்டியின் இறுதிப்போட்டி மழைகாரணமாகத் தடைப்பட்டதால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு பந்து வீச்சாளருக்கான அதிகபட்ச ஓவர்களாக 3 ஓவர்கள் வீச முடியும். ஓய்வு 10 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. உள்ளுர் நேரப்படி இரவு 09:30 மணிக்கு போட்டி இடம்பெற இருப்பதாக ஐ.சி.சி. அறிவித்திருக்கிறது.
-
காலி மாவட்டத்தில் 45 வீடுகள் திறப்பு விழா
காலி: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தென் மாகாணத்தைச் காலி மாவட்டம் வல்பிட்டி தோட்டத்தில் 25 வீடுகளும், சிட்ரஸ் தோட்டத்தில் 20 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு இன்று காலையில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
-
ஈராக்கில் எரிபொருள் டாங்கர் மூலம் தாக்குதல்; 47 பேர் பலி
பக்தாத்: ஈராக் தலைநகர் பக்தாத்திற்கு தெற்கே உள்ள ஹில்லா நகருக்கு வெளியில், ஒரு காவல்துறை சோதனைச் சாவடியில் எரிபொருள் ஏற்றிவந்த டாங்கர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 47 பேர் பலியாகினர்.இவர்களில் 39 பேர் பொதுமக்கள் எனவும் மீதமிருப்பவர்கள் காவல்துறையினர் எனவும் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பலர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.
-
பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோய்
இலங்கையை பொறுத்தவரையில் பெண்கள் அதிகளவில் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மிகவும் அவசியம் இது அழகையும் வாழ்க்கையையும் பாதுகாக்கும். மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் யார்?