6வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா

  • MJ

dawan kohli indiaடாக்கா: பங்களாதேஷ் டாக்கா மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பங்களாதேஷ்-இந்தியா அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா 8 விக்கட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சிக்கண்டர் தவாண் 60, மற்றும் வீராட் கோளி 41 ஆகியோரது சிறந்த இணைப்பாட்டத்தில் பங்களாதேஷ் சொந்த மண்ணில் மீண்டும் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2012 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானைச் சந்தித்த பங்களாதேஷ், இதேபோன்றதொரு தோல்வியை தனது மண்ணில் சந்தித்திருந்தது.

dawan kohli india
சிக்கண்டர் தவாண் 60, மற்றும் வீராட் கோளி 41 ஆகியோரது சிறந்த இணைப்பாட்டத்தில் பங்களாதேஷ் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது

1984ம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத்தை இதுவரை இந்தியா 6 தடவையும், இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் இரு தடவையும் வெற்றிபெற்றுள்ளன.

Published by

Leave a comment