Category: Your Kattankudy
-
“மின்னஞ்சலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா?”- சிவா ஐயா துறை
நியுயோர்க்: இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியுயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன.
-
வல்லுறவுக்கு உள்ளாக்கி, எரிக்கப்பட்ட 15-வயது தில்லி சிறுமி மரணம்
தில்லி: இந்திய தலைநகர் தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னர்,பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, தீயினால் எரிக்கப்பட்டதாக நம்பப்படும் 15-வயது சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலின் 95 சதவீதமளவுக்கு தீக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
ஜோர்தான் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவு!
ஹாசிப் யாஸீன் கொழும்பு: ஜோர்தான் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜோர்தான் – இலங்கை பாராமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டம் இன்று (09) புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் மூன்று நாள் கல்விக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் மூன்று நாள் கல்விக் கண்காட்சி இன்று 09-03-2016 புதன்கிழமை காலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
இலங்கை அணிக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
கொழும்பு: ரி-20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள அஜ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி மீண்டும் கிண்ணத்தை வெல்வதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
-
“@” குறியீடு பரவலாக பயன்பாட்டுக்கு வந்த வரலாறு
லண்டன்: மின் அஞ்சல் மற்றும் இணையதளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் `@’ குறியீடு, 1971க்குப் பிறகே இணையத்தில் புழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இந்த குறி, ஒரு காலத்தில் தெளிவற்ற சின்னமாக இருந்தது. அப்போது கணக்கேட்டுப் பதிவாளர்களால் மட்டுமே இந்த @ குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
மட்டு சிறைச்சாலையில் சர்வதேச மகளிர் தின வைபவமும், மருத்துவ முகாமும்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மார்ச் மாதம் 8ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சர்வதேச மகளிர் தின வைபவமும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுக்கான மருத்துவ முகாமும் 08 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது.
-
மிதி வெடிகள் அகற்றும் பணிகள் மட்டு மாவட்டத்தில் முன்னெடுப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய யுத்த அனர்த்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிற்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் (வணப் பகுதியில்) புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
-
காத்தான்குடி அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கோட்டக் கல்வி பிரிவுக்குட்பட்ட அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் 2016ம் ஆண்டுக்கான சிறுவர் தடகள விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
அமெரிக்காவின் வாயை மூடி கண்டம் தாண்டும் ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது
தெஹ்ரான்: பல கண்டம் தாண்டும் ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்துப் பார்த்துள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலையும் மீறி இந்த சோதனைகளை ஈரான் நடத்தியுள்ளது.எவ்வித அச்சுறுத்தலையும் சமாளிக்க ஈரான் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
-
எம்.எச். 370 விமானம் காணாமல் போனதன் இரண்டாம் ஆண்டு நிறைவு
பெய்ஜிங்: இருநூற்று முப்பத்து ஒன்பது பயணிகளுடன் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் விதமாக மலேஷிய நாடாளுமன்றம் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.பெய்ஜிங்கில் ஒரு பௌத்த கோவிலுக்கு முன்பாக அந்த விமானத்தில் பயணித்த சீனர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். காணாமல் போன தங்களின் அன்பான உறவுகளைத் திரும்பிதருமாறு அவர்கள் அதிகாரிகளைக் கோரினர்.
-
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட், ரசிகர்களின் கையொப்பம் பெற்ற துடுப்பு மட்டையை கையளிக்கும் நிகழ்வு
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர் கொழும்பு: இந்தியாவில் இடம்பெறும் 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணியை ஆசிர்வதிக்கும் முகமாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நாடு பூராகவும் சென்று ரசிகர்களின் கையொப்பம் பெற்ற துடுப்பு மட்டையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.