அணி விபரம்
கொழும்பு: ரி20 உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் அஞ்சலோ மெத்திவ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (07) நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை அணியின் உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ரி20 அணிக்கு தலைமை வகித்த லசித் மாலிங்க நேற்றையதினம் (07) அணியின் தலைமைத்துவத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உபாதை காரணமாக, பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியா கிண்ணத் தொடரின் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே மாலிங்க பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1. அஞ்சலோ மெத்திவ்ஸ் (தலைவர்)
2. தினேஷ் சந்திமால் (உப தலைவர்/ விக்கட் காப்பாளர்)
3. ரி.எம். டில்ஷான்
4. லஹிரு திரிமான்ன
5. செஹான் ஜயசூரிய
6. மிலிந்த சிறிவர்தன
7. சாமர கபுகெதர
8. தசுன் ஷானக
9. திசர பெரேரா
10. நுவன் குலசேகர
11. துஷ்மந்த சமீர
12. ரங்கன ஹேரத்
13. சுரங்க லக்மால்
14. சசித்ர சேனாநாயக்க
15. லசித் மாலிங்க
Leave a comment