பக்தாத்: ஈராக் தலைநகர் பக்தாத்திற்கு தெற்கே உள்ள ஹில்லா நகருக்கு வெளியில், ஒரு காவல்துறை சோதனைச் சாவடியில் எரிபொருள் ஏற்றிவந்த டாங்கர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 47 பேர் பலியாகினர்.இவர்களில் 39 பேர் பொதுமக்கள் எனவும் மீதமிருப்பவர்கள் காவல்துறையினர் எனவும் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பலர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகலில் அந்த சோதனைச் சாவடியில் பல கார்கள் காத்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
கடந்த மாதம் முழுக்க ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த பல தாக்குதல்களை ஐஎஸ் குழுவினர் மேற்கொண்டனர் என்றாலும் பக்தாதிற்குத் தெற்கில் அந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் எந்தப் பிரதேசமும் இல்லை.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹில்லாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு சோதனைச் சாவடியில் நடந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
Leave a comment