Category: Your Kattankudy
-
செல்வி.A.W.அஜீபா: மருத்துவ உதவி கோரல்
புத்தளம்: புத்தளம் அல்.காசிம் சிட்டி மன்/புத்/ றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி A.W.அஜீபா கடுமையாக சுகயீனமுற்றுள்ளார். இவரது அவசர மருத்துவ தேவை கருதி ஏற்கனவே பதுளை வைத்தியசாலையில் பல இலட்சம் ரூபாய் செலவில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருந்தார். தற்போது இந்த சின்னஞ்சிறு மாணவிக்கு மீண்டும் அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று இவரது வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
-
திடீர் மின்சாரத் தடை: நாசகரச் செயல் என சந்தேகம்
கொழும்பு: நாடு தழுவிய அளவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது ஒரு நாசகாரச் செயற்படாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள், இரண்டு தடவை நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
ஓட்டுநர் இல்லாக் கார்கள்
லண்டன்: ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும் போது அவர்கள், அதன் பின்பக்கத்தில் அமர்ந்து புத்தகம் படித்தல், மின்னஞ்சல் பார்த்தல் போன்ற அன்றாட வேலைகளையும் செய்தாக வேண்டும்.
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்லவுள்ளது
கொல்கத்தா: இந்தியாவில் நடந்துவரும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது தொடர்பில் சில வாரங்களாக நிச்சயமற்ற தன்மை நிலவிய சூழலில், தமது அணி அந்தப் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு பயணிக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களின் பாதுகாப்பிற்கு பகிரங்க உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவிடம் கோரியிருந்தனர்.
-
பொன்சேகாவின் கருத்துக்கு பசில் மறுப்பு
கொழும்பு: இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தில் ஒருபகுதி கையாடல் நடந்துள்ளது என்ற அர்த்தத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
-
ஜனாஸா அறிவித்தல்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர், தனது 77வயதில் சற்று முன்னர் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-
“யுத்தம் முடிந்ததாக அறிவிக்கும் போது பிரபாகரன் உயிருடனேயே இருந்தார்”
வெள்ளைக் கொடி விவகாரத்தை விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும் * நிலத்தை முத்தமிடும் போது மஹிந்தவுக்கு எதுவும் தெரியாது * பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்தவுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்தம் முடிந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கும்போது பிரபாகரன் உயிருடன் இருந்தார்.
-
புன்னியாமீன் மறைவுக்கு முஸ்லிம் மீடியாபோரம் அனுதாபம்
அதிக நூல்களை எழுதி சாதனை புரிந்த பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பீ.எம். புன்னியாமீனின் மறைவு எழுத்துத் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என சிறி லங்கா முஸ்லிம் மீடியாபோரம் தெரிவித்துள்ளது.
-
மறையும் மறை
முக நூல் இங்கு மோக நூல் ஆனதால் அல் குர்ஆன் எனும் அக நூல் இன்று ஆகா நூல் ஆகி அலுமாரியில் தூங்குகிறது.
-
“பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்”
கொல்கத்தா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெற உள்ள டி 20 போட்டிகள், கொல்கத்தாவில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.முன்னர் அந்தப் போட்டிகள் இந்த மாதம் 19ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியினருக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் காலமானார்
கண்டி: கண்டி அஸ்கிரிய பெளத்த பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார். கீழே நிலத்தில் விழுந்த நிலையில், கண்டி போதனா மருத்துமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
-
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அண்மையில் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். வைத்தியசாலையில் அமைந்துள்ள பால் நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையத்தினை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் வைத்தியசாலை அத்தியட்சகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.