Category: Your Kattankudy
-
வாகன விலை 20 இலட்சம் வரை அதிகரிப்பு?
கொழும்பு: 1000 CC இலும் குறைந்த கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிப்பை அடுத்து, 1000 CC (சிலிண்டர் கொள்ளளவு) இலும் அதிகமான கார்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிஸ்ஸான் எக்ஸ்-ட்ரையல் (Nissan X-Trail) கார் ஒன்றின் முந்தைய வரி ரூபா 4.6 மில்லியனாக காணப்பட்டதோடு, தற்போது அதற்கான வரி ரூபா 7.9 மில்லியனாக அதிகரித்துள்ளதால், சந்தை விலை ரூபா 10 – 11…
-
ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய பிரச்சார மாநாடு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் ‘ஈமானை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளிலான இஸ்லாமிய பிரச்சார மாநாடு 27-05-2016 நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை புதிய காத்தான்குடி நூறானியா மாவத்தை அலியார் சந்தியில் இடம்பெற்றது.
-
ஹிஜ்ரி 1437 – 27.05.2016ம் திகதி நடைபெற்ற ஜம்இய்யாவின் பொதுச்சபைக் கூட்டத்தின்போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள்
ஆயுட் காலத் தலைவர் : மௌலவி ILM முஸ்தபா (பஹ்ஜி) 01. தலைவர் : மௌலவி MI. அப்துல் கையூம் (ஷர்க்கி) BA 02. செயலாளர் : அஷ்ஷெய்க் MCM. றிஸ்வான் (மதனி) BA 03. பொருளாளர் : மௌலவி NM. சிறாஜூதீன் (பலாஹி) 04. உப தலைவர்கள் (01) : மௌலவி MIM. முபாறக் (பலாஹி) (02) : மௌலவி MIM. நழீம் (பலாஹி) JP
-
15 இறாத்தல் நிறையுடன் பிறந்த குழந்தை
சென்னை: இந்தியாவின் பல பாகங்களிலுள்ள வழக்கப்படி நந்தினிக்கும் 18 வயதில் திருமணமாயிற்று. 19 வயதாவதற்குள்ளேயே கர்ப்பம் தரித்து விட்டார். 19 வயதேயான நந்தினி வழமையான பிரசவத்திற்குக் காத்திருந்தார். ஆனால் சி-செக்சன் அறுவை மூலமே பிள்ளையை வெளியே எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறிய போது அவர்களும் சம்மதித்தனர்.
-
தலைநகரில் தொடரும் விபச்சார விடுதிகள்
கொழும்பு: மாலபே பிரதேசத்தில் நடாத்திச் சென்ற விபச்சார விடுதிக்கு குறித்தப் பிரதேச மக்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் மாலபே ரொபட் குணவர்த்தண மாவத்தையில் குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் செல்பவர் அரசியல்வாதி ஒருவரின் செயலாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பயணிகளின் உயிருடன் விளையாடிய விமான ஓட்டிகளின் உரிமம் ரத்து!
ஜெய்ப்பூர்: கடந்த பெப்ரவரி 27, 2016 அன்று ஜெய்ப்பூரில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ 6E – 237 என்கிற விமானத்தின் விமான ஓட்டிகள், தாங்கள் தரை இறங்க வேண்டிய ரன் வே என்று நினைத்து ஜெய்ப்பூரின் ஒரு முக்கிய சாலையில் தரை இறங்க முயற்சித்திருக்கிறார்கள். விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த க்ரவுண்ட் ப்ரோக்சிமிட்டி சென்சார் (Ground Proximity Censor) ஆபத்தான உயரத்தில் (போதுமான உயரத்தில் பறக்காதது) பறக்காததற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகு தான் விமானிகள் தங்கள் தவறை உணர்ந்து…
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய நிருவாகத் தெரிவு
எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2016ஃ2017 ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் எதிர்வரும் 29.05.2016 அன்று காத்தான்குடி மொஹிதீன் மெத்தை ஜூம்ஆப்பள்ளிவாயலில் தற்போதய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஏ மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
“பௌத்த பிக்குவின் பொறுப்பற்ற விடயத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்”- ரம்ழான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பௌத்த பிக்குவின் பொறுப்பற்ற விடயத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று அதாவது 26ம் திகதி மட்டக்களப்பு நகரில் பௌத்த விகாரையின் பிக்கு தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பரத் தம்பிலா. பர மட்டையா என்ற கேவலமான வார்த்தை பிரயோகம் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் உணர்வுகளையும் புன்படுத்தியுள்ளது இச்சம்பவத்தினை நாட்டில்…
-
ட்ரம்புக்குத் தேவையான “கட்சி உறுப்பினர் ஆதரவு கிடைத்துவிட்டது”
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்குத் தேவையான அந்த கட்சிப்பிரதிநிதிகளின் ஆதரவு தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து தான் பெருமையடைவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அந்த கட்சியின் மாநாடு ஜூலை மாதம் நடக்கும்போது இவரது நியமனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
-
சிறுபான்மை சமூகத்தின் முதுகெலும்புள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய முதலமைச்சர்களில் தற்பொழுதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள், தன்மானம் ,தனித்துவம் போன்றவற்றினை எந்த அரசியல் பின்னணிக்காவும் விட்டுக்கொடுக்காத முதுகெலும்புள்ள முதலமைச்சராக அண்மைக்காலமாக செயற்பட்டு வருகின்றார்.
-
முப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை
திருகோணமலை: மாகாண முதலமைச்சர் ஒருவருக்கு முப்படை தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கெப்டன் அஹ்ரம் அலவி உறுதிப்படுத்தினார். இந்த தடை காரணமாக கடற்படை, விமானப் படை மற்றும் இராணுவ படைத் தளங்களுக்குள் அவர் பிரவேசிக்க முடியாது என்றும் கூறினார்.
-
பொறியாலாளர் அப்துர் ரஹ்மானுக்கு கல்விச்சேவைக்கான சர்வதேச விருது!
AGM. பழீல், MT. ஹைதர் அலி பெங்களுரு: கல்வித்துறையில் ஆற்றிவரும் சிறப்பு மிக்க சேவைக்கான சர்வதேச விருதொன்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆர்யபத்தா நிறுவனத்தினால் (Aryabhatta Organisation) கடந்த 18.05.2016 அன்று இந்தியாவில் நடாத்தப்பட்ட வருடாந்த விருது வழங்கும் விழாவின்போதே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.