15 இறாத்தல் நிறையுடன் பிறந்த குழந்தை

baby.1சென்னை: இந்தியாவின் பல பாகங்களிலுள்ள வழக்கப்படி நந்தினிக்கும் 18 வயதில் திருமணமாயிற்று. 19 வயதாவதற்குள்ளேயே கர்ப்பம் தரித்து விட்டார். 19 வயதேயான நந்தினி வழமையான பிரசவத்திற்குக் காத்திருந்தார். ஆனால் சி-செக்சன் அறுவை மூலமே பிள்ளையை வெளியே எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறிய போது அவர்களும் சம்மதித்தனர்.

ஆனால் பிள்ளையை கர்ப்பப்பைக்குள் இருந்து வெளியே எடுத்த டாக்டர்களிற்கு அதிர்ச்சி குழந்தையின் எடை சராசரி ஒரு இந்தியக் குழந்தை 10 மாதத்தில் இருக்கும் நிறை. ஆமாம் நந்தினியின் செல்லக்குட்டியின் நிறை 15 இறாத்தல் 7 அவுன்ஸ்.

இந்தியாவிலேயே இதுவரை பிறந்த குழந்தைகளில் பெரியதாக இந்தக் குழந்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு பார்த்த வைத்தியர் பூர்ணிமா அவர்களின் தகவலின் படி இந்தியாவிற்கு இது ஒரு செய்தி.

baby.1

இங்கே நாங்கள் அமெரிக்காவிலுள்ள அஸ்ரின் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஜோன் மிரோக்ஸ்வி எப்போதோ கூறியதை உங்களிற்கு சமர்ப்பணம் செய்கின்றோம். “பிள்ளை பெறுவதற்கு சிறந்த வயது 19 ஆகும். உடலியற்கூறுகள் இளமையாகவும், துடிப்பாகவுமுள்ள இந்தக் காலத்தில் பிள்ளைகள் ஆரோக்கியமாகப் பிறக்கின்றார்கள்” என்றார்.

baby

இவர் இதனை 2002ம் ஆண்டில் தெரிவித்த போது ஏதோ பொழுது போக்காகத் தெரிவிக்கவில்லை. மாறாக இது தொடர்பான ஆராச்சியை மேற்கொண்டே தெரிவித்தார். இப்போது 27 வயது வரைப் படிக்கின்ற பெண்பிள்ளைகளால் பிள்ளை பெறுவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாவிட்டாலும், எந்த வயதுவரை பிள்ளைகள் பெறலாம் எவ்வளவு ஆரோக்கியமாக அவர்கள் இருப்பார்கள் என்ற செய்தியை எதிர்காலத்தில் பார்ப்போம். 35 வயதிற்கு பிறகு பருமணாகும் குணாதிசயத்தை பெண்கள் கொண்டிருப்பதால் அதற்கு முன்பே மகப்பேறடைவதே சிறந்ததாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s