“பௌத்த பிக்குவின் பொறுப்பற்ற விடயத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்”- ரம்ழான்

ramlanமட்டக்களப்பு: மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பௌத்த பிக்குவின் பொறுப்பற்ற விடயத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  நேற்று அதாவது 26ம் திகதி மட்டக்களப்பு நகரில் பௌத்த விகாரையின் பிக்கு தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பரத் தம்பிலா. பர மட்டையா என்ற கேவலமான வார்த்தை பிரயோகம் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் உணர்வுகளையும் புன்படுத்தியுள்ளது இச்சம்பவத்தினை நாட்டில் சமாதானத்தை விரும்பும் எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது.

ஒரு தனிப்பட்ட அரசியல் பிரதி நிதிக்கு எதிராக மேற்கௌ;ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களையும் கவளையடையச் செய்துள்ளது மட்டக்களப்பு மங்களராம விகாரையின் மதகுருவுக்கு தனிப்பட்ட வகையில் கிழக்கு முதலமைச்சர் மீது ஏற்பட்ட காழ்புனர்ச்சி மற்றும் குரோதம் காரணமாக மட்டக்களப்பிற்கு வெளியிலிருந்து பேரூந்துகளில் மக்களை அழைத்து வந்து மட்டக்களப்பு நகரத்தில் இந்த மாவட்டத்தின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தான் ஒரு இனவாதி என்பதை தெட்டத் தெழிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்தவொரு இனத்திற்கோ அல்லது எந்தவொரு படைப்பிரிவினருக்கோ எதிரானவர்கள் அல்லர் எப்போதும் சமாதானத்தை விரும்புகின்றனவர்கள் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தப் பாதிப்பாக இருந்தாலும் சரி அல்லது எந்தவொரு அனர்த்த பாதிப்பாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சினையாக இருந்தாலும் சரி சாதி மத இன வேறுபாட்டுக்கு அப்பால் முதலில் முந்திக் கொண்டு தங்களது நேசக் கரத்தை நீட்டுபவர்கள் முஸ்லிம்களே இவ்வாரான நட்பன்புகளால் வளர்க்கப்பட்ட இந்த நாட்டு முஸ்லிம்களின் மனதை புன்படுத்தும் வகையில் தனது இனவாதத்தை வெளிப்படையாக கக்கும் வெறிபிடித்த இவ்வாரான மதகுருக்கள் அவர்கள் அணிந்திருக்கும் அந்த காவியுரைடக்கும் பௌத்த தர்மத்திற்கும் அருகதையற்றவர்கள்.

இவ்வாரான மத குருக்கள் இந்த நாhட்டில் சமாதானத்திற்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதை இந்த நாட்டு பாதுகாப்பு படைனரும் அரசாங்கமும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அது மாத்திமின்றி இவ்வாரான தனிப்பட்ட தனது சொந்த விடயங்களுக்காக மக்களை பேரூந்துகளில் அழைத்து வந்து பிழையாக வழி நடாத்தும் பொறுப்பற்ற மதகுருக்களின் விடயத்தில் பௌத்த சாசன அமைச்சும் வழிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு அரசியல் பிரமுகர் ஒரு படை அதிகாரியை திட்டினார் அல்லது அச்சுருத்தனார் என்பதற்கு ஆள் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த பௌத்த பிக்கு கடந்த காலத்தில் குடும்ப ஆட்சிக்கு துணை போகாத பாதுகாப்பு படை வீரர்களும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் பழி வாங்கப்படுகின்ற போது எங்கே இருந்தார் அதற்காக வாய் திறக்க வக்கத்த இந்த மதகுரு இன்று கிழக்கு முதலமைசருக்கு எதிராக வறிந்து கட்டிக் கொண்டு முழு முஸ்லிம்களின் உணர்வுகளை புன்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ramlan

NK. றம்ழான்

அவ்வப்போது மட்டக்களப்பு மங்களராம விகாரையின் தேவைகளான சிந்தை (மைபூசுதல்) மற்றும் இன்னும் பல தேவைகளுக்கு உதவி கோரிய போதேல்லாம் சாதி மத இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனம் கோனது உதவியர்கள் பரத் தம்பிலா என்னும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக சமூகமும் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுமே என்பதை மட்டக்களப்பு மங்களராம விகாரையின் மதகுரு மறந்து விடக் கூடாது.

இவ்வாரான இன முரன்பாடுகளை தோற்றுவிக்கும் விடயங்களை மதகுருக்கள் தவிந்து கொள்ள வேண்டும் மதங்களின் ஊடாக மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் மதகுருக்கள் என்ற பொர்வையில் இன்னும் மக்களை இனரீயாக வழி நடாதக் கூடாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s