Category: Your Kattankudy
-
இந்தியா-ஈரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்து
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் ஹாசன் ரெளஹானி இடையே முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.ஒமான் வளைகுடா பகுதியில் உள்ள இந்த திட்டத்துக்கு சுமார் 200 மில்லியன் டொலர்களை இந்தியா முதலீடு செய்கிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு கடல் வழியாக ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய வர்த்தக பாதை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கொலன்னாவை மஸ்ஜிதுல் சம்மேளன தலைவரின் அவசர வேண்டுகோள்!
சுஐப் எம் காசிம் கொழும்பு: வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொலன்னாவைப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்காண மக்கள் அகதிகள் முகாம்களிலும் பாடசாலைகளிலும், பன்சலையிலும் தனியார் வீடுகளிலும் தங்கியிருந்து மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்கின்றனர்.
-
ஈர நெஞ்சம் கொண்டு உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
குவைத்: அதி கன மழை, பெரு வெள்ளம் & நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரண்டு இலட்சத்து பத்தொன்பதாயிரம் (219,000) இலங்கை ரூபாய் நிதியுதவி. *அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா* ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
-
மல்வானையில் நிவாரணப்பணியில் ஈடுபட்ட NTJ உறுப்பினர்களுக்கு நடந்தது என்ன?
முஹம்மது நியாஸ் மல்வானை: காத்தான்குடியில் இருந்து சுமார் பன்னிரண்டு இலட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப்பொருட்களுடன் மல்வானை பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினை மல்வானையை நெருங்கும் வழியில் அங்கே மீட்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் “நீங்கள் ஏதாவது பிரதேசங்களுக்கு செல்லவேண்டியிருந்தால் வாருங்கள் நாங்கள் உங்களை அழைத்துச்செல்கிறோம்” என்று மிகவும் வரவேற்புடன் வாக்களித்துள்ளார்கள்.
-
“மீராவோடையில் மாற்றத்தை நோக்கிய பயணம் உருவாக்கப்பட வேண்டும்”- யூத் ஸ்டார் விளையாட்டு கழக தலைவர் பதுர்டீன்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மீராவோடை: ஓட்டமாவடி மீராவோடை பிரதேசத்தில் விளையாட்டினை மட்டும் குறிக்கோளாக வைத்து தனது முன்னெடுப்புக்களை மட்டுப்படுத்தாமல் சமூக சேவையினையும், பிரதேசத்தின் ஒற்றுமையினையும் முக்கிய நோக்கமாக கொண்டு பத்து வருடங்களுக்கும் மேலாக மீராவோடை பிரதேசத்தில் இயங்கி வருக்கின்ற கழகமாக யூத்-ஸ்டார் கழகம் இருந்து வருகின்றது. குறித்த கழகமானது அதிகளவிலான உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகின்ற விளையாட்டு கழகமாக மீராவோடை பிரதேசத்தில் இருப்பதன் காரணமாக பிரதேசத்தில் பிரதான ஜும்மா பள்ளிவாயலாக இருக்கின்ற மீரா ஜும்மா பள்ளிவாயலின் புதிய…
-
“திருமணம் செய்யாதது அதிர்ஷ்டமே”- நாமல் ராஜபக்ஸ
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமைக்கான காரணத்தை விளக்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் சீ.பி.ரட்நாயக்கவின் மகன் அபீத ரட்நாயக்க – திலினி சாபா ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சம்பாஷணையின் போது இந்த விடயத்தை விளக்கியுள்ளார்.
-
நீரில் மூழ்கப் போகும் கொழும்பு
கொழும்பு: கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் வடக்கு கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து, இருப்பிடங்களை இழந்தனர். இந்நிலையில் கொழும்பு நகரில் காணப்படும் பலவீனம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் காணப்படுகின்ற பலவீனம் காரணமாக கொழும்பு நகரம் நீரில் மூழ்கி அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
-
”ஒரு சொட்டு குடிநீரைக் கூட வீணாக்க வேண்டாம்”
டில்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோதி குடிமக்களிடம், ஒரு சொட்டு குடிநீரைக் கூட வீணாக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். அதிகரித்துள்ள வெப்ப அலைகள் மற்றும் கடும் வறட்சியை சமாளிக்க இந்தியா போராடி வரும் வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வருகின்றன. தேசிய வானொலியில் குடிமக்களிடம் உரையாற்றிய மோடி, ”கடவுள் தந்த விலைமதிப்பு மிக்க பரிசு தான் நீர்” என்று கூறியுள்ளார்.
-
ஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்!
ஐ.தே.கட்சி காத்தான்குடி கொத்தணிப் பிரிவு காத்தான்குடி: ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின் அமைப்பாளர் நியமனம் தொடர்பாக, காத்தான்குடி ஐ.தே.கட்சியின் மத்திய குழுவினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதென்றும், ஐ.தே.கட்சியின் அங்கத்தவராகவும், கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவருமான ஒருவரையே இப்பதவிக்கு நியமிக்க வேண்டுமெனக் கோருவதாகவும் (22.05.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய குழு செயற்குழக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
-
ஊர் வீதி அபிவிருத்தி
எம்.எச்.எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பழைய கல்முனை வீதி விஸ்தரிப்பிற்காக மக்கள் தங்களின் மதில்கள் மற்றும் வீட்டுச் சுவர்கள உடைத்து ஒத்துழைப்பு வழங்குவதைக் காணமுடிகின்றது. நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் மிக மோசமாக காணப்பட்ட இவ்வீதியானது இதற்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்கள் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது வீதியின் நடுப்பகுதி விஸ்தரிப்பிற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
“சீனி வாப்பா” காலமானார்
காத்தான்குடி-2ம் குறிச்சி, மௌலானா சதுக்கத்தில் வசித்து வந்த சீனி வாப்பா என அழைக்கப்படும் சீனிமுஹம்மத் ஹாஜியார் இன்று வபாத்தானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-
மள்வானை வெள்ள அனர்த்த மதிப்பீட்டு பணியில் காத்தான்குடி சகோதரர்கள்
மள்வானை: வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மள்வானை பிரதேசத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பான இழப்புகளை மதிப்பீடு செய்யும் பணி அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுவரும் காத்தான்குடி பிரதேச சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.