Category: Your Kattankudy
-
முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியருடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும்
சூரிச்: ஸ்விட்சர்லாந்தின் வடக்கே இருக்கும் பேசல் உள்ளூராட்சியிலுள்ள பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று அந்த ஊரின் உள்ளூராட்சி அதிகார சபை தீர்ப்பளித்திருக்கிறது. சிரியாவிலிருந்து வந்த இரண்டு சிறுவர்கள் மதக்காரணங்களைக் காட்டி பெண் ஆசிரியைகளுடன் கைகுலுக்கத் தேவையில்லை என்று அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை இந்த தீர்ப்பு ரத்து செய்கிறது.
-
ரமழான் சிறப்பு மாநாடு!
S.சஜீத் காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 27.05.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் விடா முயற்சியினால் காத்தான்குடி தள வைத்தியசாலையில் physiotherapy பிரிவு
காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையை பெளதீக ரீதியாகவும், ஆளணி ரீதியாகவும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, கடந்த காலங்களில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் புதிதாக பல சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விசேட வைத்தியர்களும் ஒன்றன் பின் ஒன்றாக பல அர்ப்பணிப்புடன் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுகின்றார்கள். பெளதீக ரீதியாகவும் ஆளணி ரீதியாகவும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அண்மைக்காலமாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் பல நடவடிக்கைகள்…
-
NTJ மீதான மல்வானை வன்முறை தொடர்பாக ஊடகவியலாளர் MBM. பைறூஸ் அவர்களுக்கு சில தெளிவுரைகள்
முஹம்மது நியாஸ். நேற்றையதினம் (24:05:2014ஆம் திகதி) ஜப்னா முஸ்லிம் இணையதளத்தில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம் ஆசிரியர் MBM. பைறூஸ் அவர்கள் “அல்லாஹ்வுக்காக முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்..!” என்னும் தலைப்பில் ஒரு ஆக்கத்தை எழுதியிருந்தார்.
-
‘தங்க’ வெள்ளமும் நிவாரண சேகரிப்பும்
AK-48 காத்தான்குடி: வெள்ளம் வந்தது.. தற்பொழுது வடிந்தோடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அகதிமுகாம்களில் தொடர்ந்தும் அநாதரவாக இருக்கின்றனர். அரசியல்வாதிகள் ஆடம்பர இல்லங்களில் குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தியா உட்பட இதர நாடுகள் உட்பட, பல மில்லியன் பெறுமதியான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இலங்கையிடம் அமானிதமாகக் கையளித்துள்ளன.
-
ஃபேஸ்புக்கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்த மொடல் அழகி
டாக்கா: வங்கதேச பெண் மொடல் அழகி ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்துப்போவதாக அறிவித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக வங்கதேச பொலீஸார் கூறியுள்ளனர். அந்த வீடியோவில், 21 வயதான சபிரா ஹுசைன் கையில் கத்தியுடன் காணப்படுகிறார்.தான் ஒரு நபரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
-
ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் 2500 டொலர் சம்பளம் வழங்க சுவிஸ் நாடு திட்டம்
சூரிச்: நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டொலர் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தரமாக மாத வருமானத்தை அளிக்கும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
-
மடவளை தேசியப் பாடசாலையில் ஆசிரியருக்கு முட்டை வீச்சு!
கண்டி: மடவளை தேசியப் பாடசாலையில் ஆசியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஏற்பட்ட மோதல் நிலையினால் ஆசிரியர்கள் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாடசாலையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
தேசிய ரீதியில் வெற்றி பெற காத்தான்குடி உதைப்பந்தாட்ட அணிக்கு பொறியியலாளர் சிப்லி பாறுக் வாழ்த்து
– M.T. ஹைதர் அலி காத்தான்குடி: மாவட்ட செயலகத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலக உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் நடைபெறும் உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று தேசியரீதியில் நடைபெற இருக்கும் உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் மாகாண சபை உறுப்பினா் பொறியியலாளர் சிப்லி பாறுக்.
-
பத்திரிகையாளர் பைரூஸின் ஓரக்கண் பார்வை…. NTJ வன்மையாகக் கண்டிக்கிறது
கடந்த 22.05.2016 ம் திகதியன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மல்வானைப் பகுதியில் அனர்த்த நிவாரண உதவியை வழங்கியது. இந்தக்கட்டத்தில் நபவிய்யா எனும் தரீக்கா குழுவினர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களை மோசமாக வசைபாடியும் ஆயுதங்களால் தாக்கியதையும் அறிந்திருப்பீர்கள்!
-
ஸிகா வைரஸ்: ‘1970களில் செய்த தவறுக்கான தற்போதைய தண்டனை’
லண்டன்: கொசுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையில் 1970களில் நேர்ந்த மிகப்பெரிய தோல்வியே தற்போது உலக அளவில் ஸிகா வைரஸ் பரவலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
-
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது
கொழும்பு: முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு சென்றிருந்த நிலையில், அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக அனுர சேனாநாயக்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.