பொறியாலாளர் அப்துர் ரஹ்மானுக்கு கல்விச்சேவைக்கான சர்வதேச விருது!

  • AGM. பழீல், MT. ஹைதர் அலி

rahumanபெங்களுரு: கல்வித்துறையில் ஆற்றிவரும் சிறப்பு மிக்க சேவைக்கான சர்வதேச விருதொன்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆர்யபத்தா நிறுவனத்தினால் (Aryabhatta Organisation) கடந்த 18.05.2016 அன்று இந்தியாவில் நடாத்தப்பட்ட வருடாந்த விருது வழங்கும் விழாவின்போதே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆர்யபத்தா நிறுவனமானது, இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலுமுள்ள துறைசார் நிபுணர்களையும் சிறப்பு சேவையாளர்களையும் கௌரவிக்கும் வகையில் Aryabhatta International Awards எனும் சர்வதேச விருதுகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில், இலங்கையின் தனியார் உயர் கல்வித்துறையில் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக ஆற்றிவரும் பங்களிப்பினை மதித்து கௌரவிக்கும் முகமாகவே இந்த விருதானது பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி வாய்ப்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில் சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகளை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுத்தரும் வகையில் BCAS CAMPUS நிறுவனத்தினை 1999இல் ஸ்தாபித்த பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அதன் தலைவராகவும் நிறைவேற்று அதிகாரியாகவும் தற்பொழுதும் கடமையாற்றி வருகிறார். இவரது தலைமையில் இயங்கும் இந்த உயர்கல்வி நிறுவனமானது உயர் கல்வித்துறையிலும் தொழிற் கல்வித்துறையிலும் ஏராளமான புதிய வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளதோடு ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் உயர்ந்த கல்வித்தகைமைகளையும் மிகச்சிறந்த தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கும் வழி செய்துள்ளது. அத்தோடு கடந்த 2014ம் ஆண்டு LMD வர்த்தக சஞ்சகையினால் நடாத்தப்பட்ட ஆய்வில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட தனியார் உயர்கல்வி நிறுவனமாக BCAS Campus தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு இன்றும் இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது. பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் இயங்கும் இக்கல்வி நிறுவனம் இலங்கை மாணவர்களுக்கான வாய்ப்புகள் மாத்திரமன்றி பல்வேறு வெளிநாட்டு மாணவர்களையும் கவருகின்ற நிறுவனமாக வேகமாக மாறிவருகிறது.

rahuman

இந்தியாவின் பெங்களுர் நகரத்தில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் கல்வி, தொழில் நுட்பம், அறிவியல், கலை, வர்த்தகம் என்பன உள்ளிட்ட பலவேறு துறைகளையும் சேர்ந்த பலருக்கு இந்நிகழ்வின் போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வைபவத்தின் போது, கல்வித்துறையில் சிறந்த சேவைகளுக்கான விருதுகள் கலாநிதி K. சின்னப்பா கௌடா ( உப வேந்தர், கர்நாடக பல்கலைக்கழகம்), பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் (ஸ்தாபகர்/தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, BCAS Campus, Sri Lanka), பேராசிரியர் ஆர்கொட் பூர்ணபிரசாட், பேராசிரியர் அபிநந்தன் பெல்லாரி ஆகியோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

ஆர்யபத்தா நிறுவனத்தின் ஸதாபகத் தலைவர் கலாநிதி எச்.எல்.என்.ராவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பெங்களுர் உயர் நீதி மன்ற நீதிபதி ஶ்ரீ என்.குமார் அவர்களினாலும் ஏனைய அதிதிகளினாலும் இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆர்யபத்தா நிறுவனம் வழங்கும் இந்த சர்வதேச விருதானது, இலங்கையைச் சேர்ந்த கல்விச்சேவையாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s