Category: Your Kattankudy
-
மீண்டும் கொக்கரிக்கும் பொது பல சேனா
கொழும்பு: இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படையான இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென பொது பலசேனா தெரிவித்தது.
-
துபாயில் வெசாக் கொண்டாட்டம்
– ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் கலாச்சார நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை ( 2013.05.10 ) துபாயில் உள்ள லத்திபா வைத்தியசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .
-
அல் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம்
கெய்ரோ: இஸ்ரேலின் அல் அக்ஸா பள்ளிவாசல் மீதான அத்துமீறல்களுக்கு சர்வதேச சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என அரபு லீக் குற்றம்சாட்டியுள்ளது. புனித அல் அக்ஸா பள்ளிவாசல் மீது யூத குடியேற்றவாசிகள் கடந்தவாரம் அத்துமீறி நுழைந்தது,
-
‘மகாசென்’ சூறாவளி வடக்கு நோக்கி நகர்வு: தரையை கடக்க நான்கு நாட்கள் செல்லும்
கொழும்பு: திருகோணமலையிலிருந்து 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ சூறாவளி வட பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்றுத் தெரிவித்தார்.
-
11 ஆயிரம் படையினரின் பிரமாண்ட அணிவகுப்பில் யுத்த வெற்றி தினக் கொண்டாட்டம்!
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ தலைமையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள யுத்த வெற்றி நிகழ்விற்காக, படையினர் நேற்று காலி முகத்திடலில் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.
-
டோனி பிளயரின் மைத்துனி லோரன் பூத்தின் இஸ்லாமிய திருமணம்
-MJ லண்டன்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயரின் மைத்துனியான லோரன் பூத், 45, கடந்த மாதம் தான் விரும்பிய சமூக ஆர்வளரான சொஹைல் அகமட், 49, என்பரை இரகசியமாகத் திருமணம் செய்தார்.
-
காத்தான்குடி மக்கள் சார்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட சவுதி அரேபிய முப்திகள்.
டீன் பைரூஸ். காத்தான்குடி: ஹிறா பௌண்டேசனின் ஏற்பாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு குடி நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு (12.05.2013 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய உயா் அதிகாரிகள் பிரதியமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
-
பொஸ்டன் குண்டுதாரியின் உடல் அல்-பர்ஸாக் மையவாடியில் நல்லடக்கம்!
-MJ ரிச்மண்ட்: கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி அமெரிக்கா, பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியின் நிறைவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவரான 26 வயதுடைய ‘தமர்லான் சர்னாவ்’ என்பவரின் உடல் நேற்று அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்திலுள்ள அல் பர்ஸாக் எனும் சிறிய முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நவாஸ் ஷெரீப்…..
-OIT இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 3 வது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அந்த நாட்டின் வரலாற்றில் தேர்தல் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதமர் என்ற பெருமையும் நவாஸ் ஷெரீப்புக்கு கிடைத்திருக்கிறது!
-
ஹிறா பௌன்டேசன் நிறுவனத்தால் 300 தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இலவசக் குடி நீர் வழங்கும் வைபவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் வரிய மற்றும் குடிநீர் பெற கஸ்டப்படும் வரிய மக்களுக்கு ஹிறா பௌன்டேசன் நிறுவனத்தால் தொடர்ந்தும் நீர் இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
-
மட்டுவில் மகாசேன் சூறாவளிப்புயல்-கடல் கொந்தளிப்பு -மக்கள் பெரிதும் அவதி
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட மகாசேன் சூறாவளிப்புயலானது தற்போது கிழக்கிலும் வீசி வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, பாலமுனை, ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 03.30மணியிலிருந்து கடுமையான புயல் காற்று வீசியது.
-
மழையுடன் கூடிய கடும் காற்று: மரம் முறிந்து விழுந்ததால் காத்தான்குடி கடற்கரை வீதிப் போக்கு வரத்து தடை….
டீன் பைரூஸ். காத்தான்குடி: கிழக்கின் 700 KM க்குஅப்பால் நிலை கொண்டிருந்த MAHASEN எனும் சூறாவளி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மழையுடன் கூடிய பலமான காற்று வீசியதால் பல இடங்கள் பாதிக்கப் பட்டிருப்பதை அறிய முடிகின்றது.