காத்தான்குடி மக்கள் சார்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட சவுதி அரேபிய முப்திகள்.

டீன் பைரூஸ்.

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி:  ஹிறா பௌண்டேசனின் ஏற்பாட்டில் தமிழ்,முஸ்லிம்  மக்களுக்கு குடி நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு  (12.05.2013 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய உயா் அதிகாரிகள் பிரதியமைச்சரினால் பொன்னாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ். MA.MP அவா்களின அழைப்பினை ஏற்று காத்தான்குடிக்கு விஜயம் செய்த நிதாஉல் கைர் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத்,

சவூதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் ஸூஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸூஊத் அல் ஈத்,

சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல்,

ரியாத் அல் குர்-ஆன் மனனப் பிரவு உப தலைவர் அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான்,மற்றும் அஷ்ஷெய்க் இப்றாஹீம், அஷ்ஷெய்க் ஸர்ஹான்,

ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான MLAM.ஹிஸ்புல்லாஹ். MA,MP அவா்களினால் பொன்னாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டனர்.OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment