துபாய்: துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் கலாச்சார நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை ( 2013.05.10 ) துபாயில் உள்ள லத்திபா வைத்தியசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .
துபாய் வாழ் இலங்கையர்கள் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலையில் பயிலும் இலங்கை பௌத்த மத சிருவர்களினால் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், இசை நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
துபாய்க்கு உத்தியோக பூர்வ விடயமாக வருகைதந்து இருந்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மற்றும் துபாயில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ஜெனரல் MM. அப்துல் ரஹீம் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
பெரும் பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் ஒழுங்கு செய்த இன் நிகழ்ச்சியில் முஸ்லிம்களான பிரதி அமைச்சரும், ஜெனரலும் கலந்து கொண்டமைக்கு ஏற்பாட்டாளர்கள் தமது பாராட்டுக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர்.

Leave a comment