அல் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம்

al aqshaகெய்ரோ: இஸ்ரேலின் அல் அக்ஸா பள்ளிவாசல் மீதான அத்துமீறல்களுக்கு சர்வதேச சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என அரபு லீக் குற்றம்சாட்டியுள்ளது. புனித அல் அக்ஸா பள்ளிவாசல் மீது யூத குடியேற்றவாசிகள் கடந்தவாரம் அத்துமீறி நுழைந்தது, ஜெரூசலத்தின் தலைமை முப்தி மொஹமத் ஹுஸைன் இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்டது தொடர்பில் அரபு லீக் உயர்மட்ட தூதுக்குழு நேற்று முன்தினம் கெய்ரோவில் அவசர கூட்டத்தை நடத்தியது. அதில் அல் அக்ஸா பள்ளிவாசல் மீதான அத்துமீறல்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டது.

ஆக்கிரமிப்பு பலஸ்தீனத்தில் இருக்கும் முஸ்லிம் புனிதத் தலமான அல் அக்ஸா பள்ளிவாசலைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம், யுனெஸ்கோ உட்பட சர்வதேச சமூகம் ஏற்கவேண்டும் என அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் சர்வதேச சட்டங்களை மீறும் செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம், வத்திக்கான் மற்றும் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கு அரபு லீக் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

– தினகரன்

Published by

Leave a comment