Category: Your Kattankudy
-
இந்திய உயர் ஸ்தானிகருக்கு விசேட பிரியாவிடை
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் தமது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியாவின் ஆசிய பிராந்தியத்துக்கான செயலாளராக நியமனம் பெற்றுச் செல்லும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காண்த்தா அவர்களுக்கு நேற்று இரவு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் விசேட பிரியாவிடை வைபவமொன்றை நடத்தினார்.
-
சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட யுத்த சூனிய வலயம்- இலங்கையின் கொலைக்களங்கள் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்கவும்: பி.எம்.அம்சா
கொழும்பு: பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட யுத்த சூனிய வலயம்- இலங்கையின் கொலைக்களங்கள் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகத்தின் தலைமைப் பிரதிநிதி பி.எம்.அம்சா பிரித்தானியாவின் தொலைக்காட்சி சேவையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கொகா-கோலாவின் இரகசியம் 1.5 கோடி!
நியூயோர்க்: பழம்பொருட்களில் கிடைத்த ‘கொகா-கோலா’ தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இண்டர் நெட்டில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
ஸ்பொட் பிக்ஸிங்கும்..மெட்ச் பிக்ஸிங்கும்….
சென்னை: உலகையே ஒரு நேரத்தில் பெரும் பரபரப்பாக்கிய கிரிக்கெட் ஸ்பொட் பிக்ஸிங் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. இந்த முறை பிரபலமான கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியி்ல் முழ்கியுள்ளனர்.முன்பு மெட்ச் பிக்ஸிங்தான் பிரபலமாக இருந்தது.
-
‘இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வதான முடிவு சர்ச்சைக்குரியது’ – பிரிட்டிஷ் துணைப் பிரதமர்
லண்டன்: இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக் கூறியுள்ளார்.
-
க.பொ.த. (உ/த) வகுப்புகள் ஜுலை 15 முதல் ஆரம்பம்
கொழும்பு: இவ்வருடத்துக்கான க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஜுலை 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்ற கிண்ணியா நகரபிதா ஹில்மி நடவடிக்கை
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கை சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று
-
மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை ஆரம்பம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மதவாச்சி: இலங்கையின் போக்குவரத்து சேவையில் மற்றுமொரு வரலாற்று பதிவாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை அமைந்துள்ளது.
-
சுங்க திணைக்கள வருமானம் அதிகரிப்பு!
கொழும்பு: கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 510மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
-
உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஜனாதிபதி இணக்கம்
கம்பாலா: உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
அஸாத் சாலி மீண்டும் ஐ.தே.க இல் இணைவு!
AK-77 கொழும்பு: அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, மீண்டும் ஐ.தே.க. இல் இணைவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.