பொஸ்டன் குண்டுதாரியின் உடல் அல்-பர்ஸாக் மையவாடியில் நல்லடக்கம்!

130510-tsarnaev-grave-430p.photoblog600[1]-MJ

ரிச்மண்ட்: கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி அமெரிக்கா, பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியின் நிறைவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவரான 26 வயதுடைய ‘தமர்லான் சர்னாவ்’ என்பவரின் உடல் நேற்று அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்திலுள்ள அல் பர்ஸாக் எனும் சிறிய முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இக்குண்டுதாரியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை நல்லடக்கத்துக்கான திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், இக்குண்டுதாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு எந்த அமைப்புக்களும் முன்வரவில்லை.

boston_marathon_explo_jone[1]

உள்ளுர் இஸ்லாமிய அமைப்புக்களும் உடலை அடக்கம் செய்வதற்கு தயக்கம் காட்டின.  ‘நாங்கள் இஸ்லாமியர்கள். அப்பாவி மக்களைக் கொள்வதற்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. எங்கு வாழ்ந்தாலும் அந்நாட்டு சட்டங்களுக்கும் மக்களுக்கும் கண்ணியம் கொடுத்து சமாதானமாக வாழவே இஸ்லாம் வலியுறுத்துகிறது.’ என்பதாக ரிச்மண்டன் நகர இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கூறினார்.

2013-05-10T232955Z_1_CBRE9491T9Y00_RTROPTP_2_USA-EXPLOSIONS-BOSTON-BODY[1]

இதற்கிடையில் எங்கு அடக்கம் செய்வதென்றும் அமெரிக்கா உயர் மட்டங்களில் இழுத்தடிப்பு இடம்பெற்று வந்தன. ஓர் தேசத் துரோகிக்கு அமெரிக்காவில் அடக்கம் செய்வதற்கு அமெரிக்க உயரதிகாரிகள் பலர் தயக்கம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் சில பொது அமைப்புக்கள் ஆத்மா சாந்திக்காக அவ்வுடலை உடனே அடக்கம் செய்வதற்கு உதவிபுரியுமாறு கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் பல நாட்களாக இழுபட்டு வந்த நிலையில் ஓர் பெண்னொருவரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்நலடக்கத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இப்பெண் ரிச்மண்ட் முஸ்லிம் அமைப்பை தொடர்பு கொண்டு, இந்நலடக்கத்துக்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்யுமாறு கேட்டிருந்தார்.

Al-Bazarkh-cemetery-owner-620x362[1]

ரிச்மண்ட் இஸ்லாமிய மார்க்கறிஞர் ஒருவரும் பொலிஸாருமே இந்நல்லடக்கத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ரஸ்யாவைப் பிறப்பிடமாக் கொண்ட தமர்லான் சர்னாவ் தனது தம்பியுடன் கல்வி கற்பதற்கு அமெரிக்காவில் 1999ல் குடியேறி இருந்தார். ஓர் மல்யுத்த வீரராக திகழ்ந்த தமர்லான், எதிர்வரும் ஒலிம்போட்டியில் அமெரிக்காவுக்காக பங்கேற்க இருந்தார்.

130510-tsarnaev-grave-430p.photoblog600[1]

‘தனது மகனின் சடலத்தை ரஸ்யா ஒரு போதும் அனுமதிக்காது. அதனால் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யுங்கள்’ என தமர்லானின் தாய் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்ட வினயமான வேண்டுகோளுக்கமைய இந்நலடக்கம் அமெரிக்காவில் இடம்பெற்றிருக்கின்றது.

பொஸ்டன் இரட்டைக் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன், 250க்கும் அதிகமானோர் காயப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. காயங்களுடன் கைது செய்யப்பட்ட இவரது சகோதரர் தற்பொழுது பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Published by

Leave a comment